Tamil Cinema News | சினிமா செய்திகள்
பத்து வருஷமா என் வாழ்க்கைய தொலச்சுட்டேன்.. பிக் பாஸ் வீட்டில் புலம்பித் தவிக்கும் பிரபலம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக அனு தினமும் ஏதாவது ஒன்றை செய்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் லக்சரி பட்ஜெட்காக, கடந்த வார தொடர்ச்சியான கால் சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டாஸ்க்கின் மூலம் பலர் தங்களுடைய கோபம் வன்மம் பகை போன்றவற்றைக் தீர்த்து கொண்டு வருகின்றனர். ஆனால் ஏற்கனவே நடந்த சோம், கேபி இருவருக்கும் இடையே இந்த டாஸ்க் சற்று மாறுபட்டதாக காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று கால் சென்டர் ஊழியரான சோம், தனது கடந்த கால வாழ்க்கையில் தொலைத்த நிகழ்வுகளைப் பற்றி உருக்கமாக பேசிய செய்திகள், சமூக வலைத்தளத்தில் பரவி அவர் மீது ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது நேற்று சோம் சேகர் ஊழியராகவும், கேப்ரில்லா வாடிக்கையாளராகவும் கால் சென்டர் டாஸ்கில் பங்கேற்றனர். அப்போது கேபி, ‘நீங்கள் எதற்காக பிக்பாஸ் ஷோக்கு வந்திருக்கீங்க?’ என்று கேட்டார்.
அதற்கு சோம், ‘ பத்து வருஷமா நான் இழந்த எல்லாத்தையும் திரும்ப பெறுவதற்கு இது ஒரு நல்ல பிளாட்பார்மா பார்க்கிறேன். அதனால இங்க வந்திருக்கேன்’ என்று கூறியதோடு, மிகவும் மன வேதனை பட்டார் சோம்.
மேலும் சோம் இந்த டாஸ்கில் பேசி முடித்த பிறகும் கூட கேப்ரில்லாவிடம் இந்த விஷயத்தைப் பற்றி கவலையுடன் கூறினார்.
எனவே, நேற்றய எபிசோடை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் பலர், சோமுவின் ஆர்மியில் சேர தொடங்கிவிட்டார்களாம்.
