Gossip: ஏராளமான பெண் ரசிகைகளின் கனவு நாயகனாக இருக்கும் இந்த ஹீரோ சமீப காலமாக அதிக மன உளைச்சலில் இருக்கிறாராம். இதற்கு முக்கிய காரணம் சொந்த படம் எடுத்து வந்த நஷ்டம்தான்.
மாஸ் நடிகரின் படத்தில் வில்லனாக நடித்த இவர் ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். அதே சமயம் தயாரிப்பாளராகவும் சில படங்களை எடுத்துள்ளார். ஆனால் சமீபத்தில் அவர் தயாரித்து நடித்த படம் தான் அவரை கடன்காரராக மாற்றி விட்டது.
வீடு வாசல் என சொத்துக்களை அடகு வைத்து எடுத்த படம் தோல்வி அடைந்ததால் தற்போது மொத்த சொத்தையும் அவர் விற்று விட்டாராம். இனி பூஜ்ஜியத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணமே அவரை மன உளைச்சலுக்கு தள்ளிவிட்டது.
சொந்த படம் எடுத்து திவாலான நடிகர்
தற்போது நடித்துவரும் இரண்டு படங்களை தான் அவர் முழுதும் நம்பி இருக்கிறார். ஆனால் அதே சமயம் உயர்ந்த நடிகையின் கணவர் இவருக்கு பலான ஆஃபர் ஒன்றை வழங்கி இருக்கிறார்.
ஏற்கனவே இளம்பெண்களை வைத்து அந்த மாதிரியான படம் எடுத்த விவகாரத்தில் இவர் பெயர் நாறிப்போனது. கோர்ட் கேஸ் என இருந்த இந்த விவகாரத்தில் நடிகை தான் அரும்பாடு பட்டு கணவரை காப்பாற்றினார்.
அதை அடுத்து சிறிது காலம் அமைதியாக இருந்த அவர் தற்போது இந்த ஹீரோவிடம் இப்படி ஒரு ஐடியாவை கூறியிருக்கிறார் ஏனென்றால் ஹீரோ சமீபத்தில் ஒரு சச்சையான புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
அதில் அவருடைய உடல் கட்டை பார்த்து தான் நடிகையின் கணவர் இப்படி ஒரு விவகாரமான யோசனையை சொல்லியிருக்கிறார். ஆனால் ஹீரோ நீயும் வேண்டாம் உன் ஐடியாவும் வேண்டாம் என்று ஒதுங்கி விட்டாராம்.
ஹீரோவுக்கு ஆஃபர் கொடுத்த நடிகையின் கணவர்
- சர்ச்சையில் சிக்கி காணாமல் போன நடிகை
- அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த வாரிசு
- ஊசி போட்டு உதடை வீங்க வைத்த ஹீரோயின்