வெற்றிமாறன் தற்போது தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு விடிவெள்ளி கொடுக்கும் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடன் ஒரு படம் இணைந்துவிட்டால் நம்மலுடைய மார்க்கெட் வேற லெவலுக்கு சென்று விடும் என்பது அவர்களது கணிப்பாக உள்ளது.
வெற்றிமாறன் தன்னுடைய சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் பல நடிகர்களை தன்னுடைய படங்களில் நடிக்க வைக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் அவர்கள் பலரும் ஒதுக்கிய கதையில் தனுஷ் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறிவிட்டார்.
எப்போதுமே சில நடிகர்களுக்கு ராசி அப்படித்தான். தன்னைத் தேடி வரும் நல்ல கதைகளை வெறுத்து ஒதுக்கிவிட்டு மோசமான கதைகளில் நடித்து சினிமாவை விட்டே காணாமல் போய்விடுவார்கள்.
அப்படி சில வருடங்கள் சினிமாவில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளவர்தான் சிம்பு. தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தவர் இவர்தான்.
ஆனால் அந்த படத்தை எந்த காரணத்திற்காக வெறுத்து ஒதுக்கினார் என்பது தற்போது வரை தெரியவில்லை. அதன் பிறகு அந்த படம் தனுஷ் நடிப்பில் வெளியாக எவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்நிலையில் தற்போது மீண்டும் சிம்பு வெற்றிமாறனிடம் தனக்கு ஒரு கதை எழுதும் படி வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டாராம். ஆனால் தற்போது அடுத்தடுத்து சூர்யா, விஜய் என சென்று கொண்டிருக்கும் வெற்றிமாறனின் பார்வை சிம்பு பக்கம் திரும்புமா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.