தல அஜித்தின் மாஸ் பற்றி தமிழ் சினிமாவில் அறிந்திடாதவர்கள் இருக்க முடியாது. கடந்த சில வருடங்களாக அஜீத் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வருகின்றன.
நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு தல அஜித் வினோத் கூட்டணியில் இரண்டாவது முறையாக வலிமை என்ற படம் உருவாகி வருகிறது. தற்போது ஸ்பெயின் நாட்டு அனுமதிக்காக படக்குழுவினர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்னும் 10 நாட்கள் மட்டுமே கிளைமாக்ஸ் காட்சிகள் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டியுள்ளது. இதன் காரணமாகவே வலிமை படம் இழுத்துக் கொண்டே போகிறது. வலிமை படம் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆன நிலையில் தற்போது தான் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மே 1ஆம் தேதி வெளியிட போவதாக அறிவித்துள்ளனர்.
தல அஜித்துக்கு தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர்களும் ரசிகர்களாக உள்ளனர். அதேபோல் தல அஜித் மாதிரி தமிழ் சினிமாவில் ஆகவேண்டும் என பல நடிகர்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர். அந்தவகையில் வெங்கட் பிரபு மற்றும் தல அஜித் கூட்டணியில் உருவாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற மங்காத்தா படத்தில் வந்த தல அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் ஒரு படம் நடிக்க வேண்டும் என ஆர்வமாக உள்ளாராம் விஜய் ஆண்டனி.

விடியும் முன் என்ற படத்தை இயக்கிய பாலாஜி கே குமார் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி நடிக்க உள்ளார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இறுதிச்சுற்று புகழ் ரித்திகா சிங் நடிக்கிறார்.
இந்த படத்தில் விஜய் ஆண்டனி சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் நடிக்க உள்ளாராம். இதை இயக்குனரிடம் விஜய் ஆண்டனியே விருப்பப்பட்டு தெரிவித்ததாக படக்குழுவிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.