Tamil Cinema News | சினிமா செய்திகள்
இன்ஸ்டாகிராம் வழியாக ஷிவானியை பார்த்து ஜொள்ளு விட்ட இளம் நடிகர்.. பிக்கப் பண்ண ஆசைப்படுகிறார் போல!
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படம் காக்கா முட்டை. இந்த படம் ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நடித்த விக்னேஷ், ரமேஷ் என்ற இரண்டு குழந்தைகள் தற்போது இளம் வாலிபர்களாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. காக்கா முட்டை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த இருவரின் படிப்பு செலவையும் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தனர்.
அதன்பிறகு இருவரும் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்தனர். தற்போது வாலிபர்கள் ஆன நிலையில் தங்களுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் உலவிட்டு வருகின்றனர்.
ஊரடங்கு சமயத்தில் போரடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் ரசிகர்களுடன் தங்களது நேரத்தை விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பெரிய காக்கா முட்டையாக நடித்த விக்னேஷ் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, நீங்கள் ஹீரோவாக நடித்தால் யார் ஹீரோயின் என்ற கேள்விக்கு ஷிவானி நாராயணன் என தெரிவித்துள்ளார். அதேபோல் மிகவும் கவர்ச்சியான நடிகை யார் என்று கேட்டதற்கும் சிவானி பெயரையே குறிப்பிட்டுள்ளார்.
உங்களுடைய கிரஸ் யார் என்று கேட்டதற்கும் ஷிவானி நாராயணன்(shivani narayanan) பெயரையே தெரிவித்துள்ளார். இதிலிருந்து விக்னேஷ் சிவானியை பிக்கப் செய்ய ரூட் போடுவது அப்பட்டமாக தெரிந்துள்ளது.

kakkamuttai-vignesh
படிச்சு வேலைக்கு போன்னு சொன்னா இன்ஸ்டாகிராம்ல பொண்ணு தேடிட்டு இருக்காரு என பலரும் சமூக வலைதளங்களில் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.
