Connect with us
Cinemapettai

Cinemapettai

udhaynidhi-stalin-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மனைவிக்கு சீட்டு கேட்டு உதயநிதி ஸ்டாலினிடம் சென்ற இளம் நடிகர்.. தொடர் தோல்வியால் அரசியல் முடிவா?

சமீபகாலமாக முன்னாள் நடிகர்கள் மற்றும் பெரிய அளவில் சாதிக்க முடியாத நடிகர்கள் அனைவருமே அரசியல் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இளம் நடிகர் ஒருவர் அரசியலில் நுழைய உள்ளாராம்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விமல். ஆரம்பத்திலிருந்து சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் பசங்க படத்தின் மூலம் தனக்கென ஒரு அங்கீகாரத்தை தேடிக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் உதவியால் ஓரளவு கவனிக்கப்படும் நடிகராக மாறி பின்னர் மினிமம் கேரண்டி நடிகராக வலம் வந்தார். ஆனால் சமீப காலமாக விமல் நடிக்கும் படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறுவதில்லை.

அதுமட்டுமில்லாமல் ஒரே மாதிரியான நடிப்பை திரும்பத் திரும்பக் கொடுத்து வருவதால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டது போல. இருந்தாலும் கைவசம் நான்கைந்து படங்கள் வைத்துள்ளார்.

இதற்கிடையில் அரசியலிலும் ஒரு கை பார்த்து விடலாம் என தன்னுடைய சொந்த ஊரான திருச்சியில் மணப்பாறை தொகுதியில் தன்னுடைய மனைவியை நிற்க வைக்க ஆசைப்பட்டு உதயநிதி ஸ்டாலினிடம் சீட்டு கேட்டு விருப்ப மனு கொடுக்க சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

vimal-akshaya-udhay-at-dmk-office

vimal-akshaya-udhay-at-dmk-office

சினிமா கைவிட்டாலும் அரசியல் கைகொடுக்கும் என நம்பி விமல் விஷப்பரீட்சை எடுத்துள்ளார் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர். விமல் மனைவி அக்ஷயா ஒரு மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top