Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இளம் நடிகர்.. அடுத்த ஹரிஷ் கல்யாண் இவர் தானா?
தற்போது சினிமாவில் வாய்ப்புகளை எதிர்பார்ப்பதைவிட சின்னத்திரை நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைத்தால் நல்ல பப்ளிசிட்டி கிடைத்துவிடும் என அனைவரும் வலைவீசி தேடி வருகின்றனர்.
அந்த வகையில் விஜய் டிவி நடத்திவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இளம் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பெயர் புகழுக்காக சேர்ந்து கொள்கிறார்கள்.
ஆனால் அவர்கள் நினைப்பது எப்போதுமே சரியாக நடந்ததில்லை. சில சமயம் நாம் நினைத்ததற்கு நேர்மாறாக நடந்து தங்களது பெயரை நாறடித்து விடும் என்பதால் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தயங்கி வருகின்றனர்.
இன்னும் சிலரோ 100 நாட்கள் அந்த வீட்டில் இருந்தால் ஓரளவுக்கு செட்டில் ஆகிவிடலாம் என முடிவு செய்து களமிறங்குகிறார்கள். மேலும் சிலரோ சினிமாவில் தனக்கு இருக்கும் மார்க்கெட்டை கொஞ்சம் உயர்த்திக்கொள்ள இதை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அந்த வகையில் ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்குப் பிறகு அவர் நடித்த ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது தொகுப்பாளராக இருந்து ஹீரோவாக மாறியுள்ள ரியோ ராஜ் பிக்பாஸில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளாராம். விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் சீரியல் நடித்த பின்னர் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பணியாற்றினார்.
அதன் பிறகு மீண்டும் விஜய் டிவியில் தற்போது பணியாற்றி வருகிறார். இடையில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அவரது நடிப்பில் அடுத்ததாக பிளான் பண்ணி பண்ணனும் என்ற படம் வெயிட்டிங்கில் உள்ளது.
இந்நிலையில் சினிமாவில் ஒரு இடத்தை பிடிப்பதற்காக ரியோ ராஜ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலாவிக் கொண்டிருக்கிறது.
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அடுத்த ஹரிஷ் கல்யாண் இவர்தான் என இப்போதே ஆர்மியை தொடங்கிவிட்டார்கள் ரசிகர்கள்.
