Connect with us
Cinemapettai

Cinemapettai

nayanthara-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

2வது முறையாக நயன்தாராவுடன் நடிக்கும் பிரபல நடிகர்.. கிசுகிசு வராமல் இருந்தால் சரி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. மற்ற மொழிகளிலும் இவருக்கு வரவேற்பு இருந்தாலும் தமிழில் மட்டும் இவர் கவனம் செலுத்தி வருவது பின்னாளில் ஏதோ பெருசாக செய்யப்போகிறார் என்பதை உணர்த்துகிறது.

ஒரு வேலை அரசியலில் களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சரி அரசியல் வேண்டாம், சினிமா பக்கம் வருவோம். நயன்தாரா கமர்சியல் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார்.

அந்த வகையில் தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான நெற்றிக்கண் படம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து நயன்தாராவின் மேலும் சில படங்கள் ரிலீசுக்கு ரெடியாக இருக்கின்றன.

நெற்றிக்கண் படத்தில் நயன்தாராவுக்கு பிறகு அதிக கவனம் ஈர்த்தது அஜ்மல் என்ற நடிகர் தான். இவர் ஏற்கனவே கோ போன்ற படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர். ஆனால் இடையில் சில தவறான படங்களை தேர்வு செய்து தடுமாறி வந்தார்.

நெற்றிக்கண் படம் இவருக்கு ஒரு நல்ல கம்பேக் படமாக அமைந்துள்ளதால் நல்ல நல்ல பட வாய்ப்புகள் தொடர்ந்து அவருக்கு கிடைத்து வருகின்றன. மேலும் நயன்தாரா தான் அடுத்து நடிக்கும் சில படங்களில் இவருக்கு சிபாரிசு செய்து வருகிறாராம்.

அந்தவகையில் நயன்தாரா அடுத்ததாக மலையாளத்தில் நடிக்கும் புதிய படம் ஒன்றில் அஜ்மலுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்க உதவி செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர். திடீரென அஜ்மல் மீது நயன்தாராவுக்கு அப்படி என்ன பாசம், சும்மாவே நயன்தாரா பிற நடிகர்களுடன் சேர்ந்தால் கிசுகிசு வரும், இனி சொல்லவா வேண்டும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

nayanthara-ajmal-cinemapettai

nayanthara-ajmal-cinemapettai

Continue Reading
To Top