உப்பு உணவிற்கு மட்டும் சுவையை தருவது இல்லை, நமது அழகையும் அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கின்றது.

உப்பு சரும அழகை மட்டுமின்றி, நகம், பற்கள், தலைமுடி போன்றவற்றின் அழகையும் மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது.

பேசியல்: உப்பு முகத்தில் உள்ள எண்ணெயை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள உதவும். 2 டீஸ்பூன் கல் உப்புடன், 4 அல்லது 5 டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி பிறகு 15 நிமிடங்கள் ஊறவைத்த பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

பொடுகை போக்கும்: உப்பு உச்சந்தலையில் அசிங்கமாக வெளிவரும் செதில்களை நீக்கி தலைமுடியின் அழகை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு பெரிதும் உதவுகின்றது. 2 டீஸ்பூன் உப்பை உச்சந்தலையில் படும்படி ஈரமான விரல்களால் மென்மையாக 20 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் ஷாம்பு போட்டு அலசிவிட வேண்டும்.

பற்கள்: உப்பு கறை மற்றும் அழுக்குகளை எளிதில் நீக்கும் தன்மை கொண்டது. உப்பை ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொண்டு, அதனுடன் ஈரமான டூத் பிரஷ் பயன்படுத்தி பற்களைத் துலக்க வேண்டும். இதன் மூலம் பற்களில் உள்ள மஞ்சள் பற்கள் விரைவில் போகும்.