Connect with us
boomerang-movie

யூடியூபில் இலவசமாக பார்க்க கூடிய டாப் ஹிட் தமிழ் திரைப்படங்கள்.

News | செய்திகள்

யூடியூபில் இலவசமாக பார்க்க கூடிய டாப் ஹிட் தமிழ் திரைப்படங்கள்.

யூடியூபில் என்ற தளம்தான் இன்று உலகம் முழுவதும் அதிக நபர்களால் பார்க்கப்படும் வீடியோ இணையதளம். அந்த அளவிற்கு கோடிக்கணக்கான வீடியோ கோப்புகளை தன்னுள் கொண்டுள்ளது.

இந்த தளத்தில் சட்டத்திற்கு புறம்பாக பல புதிய படங்கள் தரவேற்றப்படாலும் இத்தளம் அதனை உடனே நீக்கிவிடும் என்பது அனைவரும் அறிந்ததே, மேலும் பல ஹிட் திரைப்படங்களை கட்டணமின்றி பார்க்க இத்தளத்தில் வழியில்லை.

ஆனால் அப்படி கட்டணமின்றி யூடியூபில் இலவசமாக பார்க்க கூடிய டாப் ஹிட் தமிழ் படங்களை பார்ப்போம் வாங்க.

எந்திரன்:

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி இரண்டு வேடங்களில் நடித்து ரகுமான் இசையமைத்து வெளிவந்த மெஹா ஹிட் திரைப்படம் எந்திரன். இதன் இரண்டாம் பாகம் நானூறு கோடி பொருட்செலவில் தற்போது தயாராகி வருகிறது. இதன் யூடியூப் வீடியோ உங்கள் பார்வைக்கு

https://youtu.be/vx2Pf_g1bQ4

சதுரங்க வேட்டை:

நட்ராஜ் நடிப்பில் வெளிவந்து எதிர்பாராத பெருவெற்றியடைந்த திரைப்படம் சதுரங்க வேட்டை. பேராசையால் முட்டாளாக்கப்படும் மக்களை பற்றிய நல்ல திரைக்கதை உள்ள படம். காமெடி மட்டுமல்லாது அனைவரையும் சிந்திக்க வைத்த படம்.

இதன் லிங்க்

சலீம்:

விஜய் ஆண்டனி நடித்து தாயாரித்த திரைப்படம். முதல் படமான நான் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான சலீம் வெளியானது. இந்த படமும் நல்ல வசூலை கொடுத்து விஜய் ஆண்டனியை ஒரு நல்ல நடிகராக நம்மிடம் கொண்டு சேர்த்தது.

இந்த படத்திற்கான லிங்க்

தலைவா

பல்வேறு தடைகளை தகர்த்து வெளிவந்த படம் இது. தலைப்பில் தொடங்கிய பிரச்சனை மதம், தலைவர், அரசியல் என்று பல சர்ச்சைகளோடு தொடர்புபடுத்தி வெளிவர முடியாமல் தவித்தது. இறுதியாக பலரது முயற்சியால் வெளிவந்து சுமாரான வெற்றியை தந்தது. இளைய தளபதி முதல் பாதியில் ஒரு கெட்டப்பிலும் இரண்டாம் பாதியில் வேறொரு கெட்டப்பிலும் வந்து அசத்தியிருப்பார்.

படத்தின் லிங்க்

சிவாஜி:

ரஜினி ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த முதல் படம். சங்கரின் ஆஸ்தான இசையமைப்பாளரான ரகுமான் இசையில், ஸ்ரேயா, சுமன் நடிப்பில் வெளிவந்த படம். பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியும் ரகுவரனும் இணைந்து இந்த படத்தில் நடித்திருந்தனர். கருப்பு பணத்தின் பாதிப்பை பற்றிய விழிப்புணர்வை கமர்சியலுடன் தந்த படம்.

படத்தின் லிங்க்

https://youtu.be/O1Iq4eE4nR0

பாட்ஷா:

சூப்பர் ஸ்டாரின் மெஹா ஹிட் படமான தற்போது யூடியூபில் கிடைகிறது. என்னதான் இருவது வருடங்களுக்கு முன்பு வந்த படமாக இருந்தாலும் இன்றும் தலைவர் என்றாலே நம் நினைவிற்கு வருவது பாட்ஷா படம்தான். அது மட்டுமா அந்த மிரட்டும் BGM இசையில் புல்லரித்து லயித்தது இன்றுவரை இந்த ஒருபடத்திற்கு மட்டுமே என்றால் அது மிகையாகாது.

பாட்ஷா படத்தின் லிங்க்

https://youtu.be/Y0MWbSXZLhs

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top