வளர்ந்துவரும் இ-காமர்ஸ் உலகில் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான மளிகை சாமானங்கள், ஆடைகள் முதல் வாகனங்கள் வரை அணைத்தையும் இணையதளமும் மூலமாக உட்கார்ந்த இடத்தில் பெறும் வசதி உள்ளது. அப்படித் தான் விரவில் பெட்ரோல், டீசலும் உங்களது வீட்டிற்கே டெலிவரி செய்யப்பட இருக்கின்றது.

புக் செய்தால் வீட்டிற்கு டெலிவரி ஆம்,

இந்திய அரசு பெட்ரோல், டீசலை வீட்டிற்கே டெலிவரி செய்யும் முறை பற்றி ஆராய்ந்து வருகின்றது. இதன் மூலம் முன்பே புக் செய்தால் உங்கள் வீட்டிற்கே பெட்ரோல், டீசல் வந்து சேரும். இதனை உறுதி செய்யும் வகையில் பெட்ரோல் அமைச்சகம் இன்று டிவிட் ஒன்றும் செய்துள்ளது.

அதிகம் படித்தவை:  அட்டகாசமாக போரிடும் ஜான்சி ராணி ! வைரலாகுது கங்கனா ரணாவத்தின் மணிகர்னிகா டீஸர் !

தினமும் பெட்ரோல் நிலையங்கள் பெட்ரோல் நிரப்புபவர்களின் எண்ணிக்கை?

இந்தியாவில் தினமும் 350 மில்லியன் அதாவது 35 கோடி மக்கள் தினமும் பெட்ரோல் நிலையங்கள் வந்து பெட்ரோல் டீசல் நிரப்புகின்றனர். இதன் மூலம் ஆண்டுக்கு 2,500 கோடி மதிப்பாலான பரிமாற்றங்களும் பெட்ரோல் நிலையங்களில் நடைபெறுகின்றது.

தினமும் மாறும் பெட்ரோல் விலை

உலகில் அதிக அளவு பெட்ரோல் பயன்படுத்தும் நாடு இந்தியா தான், மே 1 ம் தேதி முதல் முதல் முறையாக 5 நகரங்களில் மட்டும் தினமும் பெட்ரோல் விலையை மாற்றி அமைக்கும் முறை அறிமுகப்படுத்துகின்றது, விரைவில் இந்த முறை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்த இருக்கின்றது.

டிவீட்

அதிகம் படித்தவை:  6 நாட்களில் இத்தனை கோடி வசூலா.! இருட்டு அறையில் முரட்டு குத்து வசூல் நிலவரம்.!

பெட்ரோலியம் துறை வீட்டில் பெட்ரோல் டெலிவரி செய்யும் முறையினால் நீளமான வரிசையில் நின்று பெட்ரோல் வாங்குவது குறையும் என்று டிவிட் செய்துள்ளது.