fbpx
Connect with us

Cinemapettai

அதிரவைக்கும் சுந்தர் பிச்சையின் கடந்த ஆண்டு வருமானம்!

sundar

அதிரவைக்கும் சுந்தர் பிச்சையின் கடந்த ஆண்டு வருமானம்!

கூகுள்  நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு கடந்த ஆண்டின் பங்குத் தொகையாக 200 மில்லியன் அமெரிக்க டாலர் அளித்துள்ளது அந்த நிறுவனம். இந்தத் தொகை அவர் 2015-ம் ஆண்டு பெற்ற தொகையைவிட இரண்டு மடங்காகும்.

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக 2015-ம் ஆண்டு பொறுப்பேற்றார். 2016-ம் ஆண்டுக்கான ஆண்டு வருமானமாக 6,50,000 அமெரிக்க டாலர் அவர் பெற்றுள்ளார். 2015-ம் ஆண்டு வாங்கிய சம்பளத்தைவிட சற்று குறைவாகும். சுந்தர் பிச்சை சி.இ.ஓவாக பதவியேற்ற பிறகு கூகுள் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய அறிமுகங்களைப் புகுத்தினார். யூடியூப்பில் விளம்பரங்கள் மூலம் வரும் வருவாயை அதிகப்படுத்தியிருந்தார்.

மேலும் 2016-ம் ஆண்டில் கூகுள் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட் போன்கள், விர்ச்சுவல் ரியாலிட்டி ஹைட்போன், ரவுட்டர், குரல்களைக் கட்டுப்படுத்தும் ஒலிபெருக்கி போன்றவற்றை அறிமுகம் செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இத்தகைய அறிமுகங்கள் கூகுள் நிறுவனத்தின் வருமானத்தை அதிகப்படுத்தின. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் ஹார்டுவேர் உள்ளிட்ட சேவைகளில் மட்டும் 3.1 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைத்துள்ளது. இந்த வருமானம் கூகுளின் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது 50 சதவீதம் அதிகமாகும்.

இத்தகைய காரணங்களால் 2016-ம் ஆண்டின் பங்குத் தொகையாக சுந்தர் பிச்சைக்கு 200 மில்லியன் அமெரிக்க டாலரை கூகுள் நிறுவனம் வழங்கியது. 2015-ம் ஆண்டில் அவர் பங்குத் தொகையாக 99 மில்லியன் அமெரிக்க டாலர் பெற்றிருந்தார். அதனை ஒப்பிடும் போது இந்த ஆண்டு இரண்டு மடங்கு அதிகமாக சம்பளம் பெற்றுள்ளார். சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனம் வழங்கிய  2016-ம் ஆண்டுக்கான பங்குத் தொகையின் மதிப்பை நீங்கள் இந்திய ரூபாயில் கணக்கிட்டால் உங்களுக்குத் தலைச்சுற்றல் வரலாம்… இந்திய ரூபாயின் மதிப்புக்கு  1,265 கோடி ரூபாய் அவர் கடந்த ஆண்டுக்கான ஊதியமாக பெற்றுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top