புதன்கிழமை, மார்ச் 19, 2025

எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான்.. பெரிய அந்தஸ்துள்ள நடிகைகளை கிழித்து எரியும் பஜாரி நடிகை

80 காலகட்ட படங்களில் எல்லா வேலைகளையும் செய்யும் இயக்குனர் ஒருவர் அறிமுகப்படுத்திய நடிகை. ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்தாலும் அதன்பின் வாய்ப்புகள் சற்று குறையவே நீண்டகாலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

அதன் பின் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர், அதில் சற்று பெயர் கிடைக்கவே பெரிய படங்களில் துண்டு துக்கடா கேரக்டர்களில் வந்து சென்றார். இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடித்துவிடலாம் என்று மனக்கோட்டை கட்டிய நடிகை வாயை அடக்காமல் எல்லோரிடமும் வம்பு செய்து வந்தார்.

Also Read: கிசுகிசுவால் கேரியரை தொலைத்த அக்ரகாரத்து நடிகை.. பல வருடம் கழித்து வெளிச்சத்திற்கு வந்த உண்மை

அப்படி பெரிய பெரிய ஆட்களை எல்லாம் சகட்டுமேனிக்கு பேசவே அம்மணி பக்கம் நெருங்கவே இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பயந்தனர். அதன்பின் தனக்கு கிடைத்த சின்ன சின்ன கேரக்டரை கூட நடிகையால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

அந்த நடிகை அப்படித்தான், இந்த நடிகை அப்படித்தான், எனக்கு நன்றாகத் தெரியும் என்று தன்னிடம் ஆதாரம் இருப்பது போல் அனைவரையும் தரக்குறைவாக பேசுவதும், திட்டுவதும் இருந்தார்.பெரிய நடிகைகள் அனைவரும் ஒதுங்கி போனாலும், ஒரு நடிகை மட்டும் அவருக்கு பதிலடி கொடுத்து வந்தார்.

Also Read: அப்பா பெயரை காப்பாற்ற வரும் 2வது வாரிசு.. குடும்பப் பெயரை கெடுத்த மூத்த நடிகர்

இவர்கள் சிறிது காலம், அவர்களுக்குள் சண்டை போட்டு ஓய்ந்து விட்டனர். அதன் பின் இருவரையும் சினிமாவிலிருந்து ஒதுக்கி வைத்து விட்டனர். உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்ட என்பதுதான் இப்பொழுது இவர்களின் நிலைமை.

இப்பொழுது அந்த பஜாரி நடிகை பன்னியதெல்லாம் பண்ணிவிட்டு நமக்கு ஏன் வம்பு என்று அமைதியாக இருந்து வருகிறார். பழைய நடிகைகள் பெயரைக் கெடுபதற்குதன்  இப்படி ஒரு  விஸ்வரூபம் எடுத்து விட்டு இப்பொழுது அமைதியாகிவிட்டார் போல்.

Also Read: 24 மணி நேரமும் போதை, அப்பதான் ஸ்டோரி நல்லா வருமாம்.. மேடையில் மட்டமாக பேசிய இயக்குனர்

Advertisement Amazon Prime Banner

Trending News