Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீங்கள் அஜித் ரசிகரா… இயக்குனர் சிவாவை இனி கலாய்க்காதீர்கள்

விவேகம் படத்தினால் இயக்குனர் சிவாவை கிண்டல் செய்தவர்களுக்கு, நடிகர் அஜித் தக்க பதிலடி கொடுத்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் மாஸ் காட்டும் நடிகர்களில் தனி ஆள் அஜித் தான். எப்போதுமே அவரின் படங்களுக்கு ப்ரோமோஷனே தேவைப்படாது. அதற்கு தல என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது. எங்கும் எப்போதும் அவரை பார்க்க முடியாது. வெளியுலகத்துக்கு தொடர்பே இல்லாமல் இருப்பார். இருந்தும் அவருக்கு தீவிரமான ரசிகர்கள் இன்னும் அதிகமாகி கொண்டே தான் செல்கிறார்கள். கோலிவுட்டில் வெற்றியை போல அதிக தோல்வியை சந்தித்ததும் அஜித் தான். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான எல்லா படங்களையுமே இயக்குனர் சிவா தான் இயக்கி வருகிறார்.
வீரம் படத்தில் இவர்கள் கூட்டணி தொடங்கியது. ஒரு அண்ணன் நான்கு தம்பிகள். காதலிக்கும் தம்பிகள் அண்ணனை காதலிக்க வைக்கப்படாத பாடுபடுவார்கள். இதுதான் படத்தின் பின்னணியாக அமைக்கப்பட்டு இருந்தது. படமும் அமோக வெற்றியை பெற்றது. தொடர்ந்து, அஜித் தன் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை சிவாவிற்கே கொடுத்தார். கடந்த முறை தம்பி என்றால் இதில் தங்கச்சி. ஆனால், வித்தியாசமாக அஜித்தை காட்சிப்படுத்தி மாஸ் ஹிட் கொடுத்தார். படத்தின் வசூலும் நல்லதாக அமைந்தது. இதிலும் அஜித்திற்கு சிவாவே மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டதா எனத் தெரியவில்லை. அஜித்தின் வேதாளம் படத்தினையும் மூன்றாவது முறையாக சிவாவே இயக்கினார். இங்கு தான் நம்பிக்கை உடைந்தது. படத்திற்கு ஏகபோகமான எதிர்பார்ப்பு கிளம்பியது. படத்தின் வில்லனாக விவேக ஓபராய் நடித்தார். சொல்லவா வேணும். எப்போ? எப்போ? எனக் காத்திருந்த ரசிகர்கள் செம இடியாக படம் அமைந்தது. ட்ரோல்கள், மீம்களில் சிக்கினர்.
தற்போது, அஜித்தின் அடுத்த படத்தை சிவா இயக்க மாட்டார் என கோலிவுட்டே கிசுகிசுத்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சிவாவே, அஜித்துடன் நான்காவது முறையாக கை கோர்த்தார். படத்தின் தலைப்பு முதல் நாளே விஸ்வாசம் என அறிவிக்கப்பட்டது. என் நண்பர் என்றாலும் அவர் பிற நாயகர்களை இயக்க செல்லும் போது வெற்றி இயக்குனராக செல்ல வேண்டும் என தல விரும்பியதே இந்த வாய்ப்புக்கு காரணம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், விவேகம் படத்தில் சிவாவை கிண்டல் செய்தவர்களுக்கு அஜித் சொன்ன பதிலடி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அஜித் தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம், சிவா என்னுடன் கடந்த 8 வருடங்களாக இந்த சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். அவருடைய முழு கவனமும் சினிமா பற்றி தான் வேறு எதைப்பற்றியும் கிடையாது என்று கூறியுள்ளார். எத்தனை பிரச்சனை என பேசப்பட்டாலும், சிவா மீது இன்னும் தல நம்பிக்கையை இழக்கவில்லை தானே!
