Sports | விளையாட்டு
யார்க்கர் நடராஜனின் திறமையை 2017-ல் கணித்த இந்தியா அதிரடி வீரர்.. அப்போ திட்டினாங்க இப்ப வாழ்த்துராங்க!
தமிழகத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அறிமுகமாகி மூன்றாவது ஒருநாள் போட்டியில் 2 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
2017 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஆலோசகராக இருந்தவர் விரேந்திர சேவாக்.அப்போது பஞ்சாப் அணி நடராஜனை 3 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தனர்.
நடராஜன் தேர்வு செய்ததை குறித்து விரேந்திர சேவாக்கிற்கு சில விமர்சனங்கள் எழுந்தன.உள்ளூர் போட்டிகளில் விளையாட ஒரு வீரரை ஏன் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் எடுக்க வேண்டும் என கேட்டு அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதற்கு சேவாக் தான் பணத்தை பற்றி கவலைப்படவில்லை.
அவரிடம் நிறைய திறமைகள் இருக்கிறது.துல்லியமாக யார்க்கர்களை வீசுகிறார் இவர் அணிக்கு நிச்சயம் தேவை. மேலும் அவர் நடராஜனின் பந்துவீச்சு வீடியோக்களை பார்த்ததாகவும், ஏலத்தின் போது அவரை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்ததாகவும் கூறினார்.
அப்போது பஞ்சாப் அணியில் கடைசி நேரங்களில் சிறப்பாக பந்து வீசும் வீரர் இல்லை. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த ஆண்டு நடராஜன் காயம் அடைந்ததால் பல போட்டிகளில் விளையாட முடியவில்லை.
ஆனால் நடராஜன் விளையாடிய போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றோம். மற்ற ஆட்டங்களில் தோல்வி அடைந்தோம். அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நடராஜனுக்கு 20 ஓவர் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவருக்கு ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது தனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என சேவாக் தெரிவித்திருந்தார்.

Virender-Sehwag-dhoni
