விசுவாசம்

படத்தின் அறிவிப்பு வந்த நாளிலேயே படத்தின் தலைப்பை வெளியிட்டு ஆச்சிர்யப்படுத்தினர் சத்யா ஜோதி பிலிம்ஸ். தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி என்பது மட்டுமே ஆரம்பத்தில் உறுதியானது. பின்னர் சில நாட்கள் கழித்து ஹீரோயினாக நயன்தாரா, இசை அமைப்பாளராக இமான் படத்தில் இணைந்தனர்.

Team Visuvasam

தீபாவளி ரிலீஸ் என்பது முடிவாகியும் இன்னமும் ஷூட்டிங் செல்ல வில்லை இந்த டீம். படம் ப்ரீ – ப்ரோடுக்ஷன் ஸ்டேஜில் தான் உள்ளது.

ajith

இந்நிலையில் விசுவாசம் படத்தை பற்றிய புது அப்டேட் நேற்று வெளி வந்தது. விசுவாசம் படத்தில் காமெடி நடிகராக நடிக்க இருப்பது யோகி பாபு என்ற தகவல்.

Yogi Babu

இதனை உறுதி செய்யும் விதமாக யோகி பாபுவும் ” விசுவாசம் படத்தில் இணைவது மகிழிச்சியாக உள்ளது ” என்று டிவீட்டினார்.

கூடவே இவர் தல அஜித் இரட்டை கெட் – அப்பில் இருப்பது போன்ற போட்டோ ஒன்றையும் அப்லோட் செய்திருந்தார். இது தான் படத்தின் முதல் லுக் போஸ்டர் என சிலர் முடிவு செய்து அதனை ஷேர் செய் தொடங்கினர்.

Visuvasam

விசாரித்தால் அது ரசிகர் யாரோ எடிட் செய்த போஸ்டர் தானாம். சமீபத்தில் அஜித் அவர்கள் சென்னையில் உள்ள Rifle Club-ல் கையில் துப்பாகியுடன்ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

ajith

அந்த போட்டோ இணையதளத்தில் வைரலானது. அதனை அடிப்படையாக கொண்டு தான் இந்த போஸ்டர் ரெடி செய்யப்பட்டுள்ளது என்பது தான் உண்மை.