Connect with us
Cinemapettai

Cinemapettai

yogibabu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கஷ்டம்னா கர்ணனா மாறி விடுவார் போல! அடுத்த படத்தில் பத்து பைசா சம்பளம் வாங்காமல் நடிக்கும் யோகிபாபு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்து வருபவர் தான் யோகி பாபு. மேலும் யோகிபாபு முதலில் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடக்கும் தொடங்கியிருந்தாலும் தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.

அந்த வகையில் தற்போது யோகிபாபு நடித்திருக்கும் படம் தான் ‘பேய் மாமா’. மேலும் அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய யோகி பாபு தான் சம்பளமே வாங்காமல் நடித்த ஒரு படத்தை பற்றி கூறியுள்ளார்.

அதாவது ‘பேய்மாமா’ இசை வெளியீட்டில் பேசய யோகிபாபு தான் சம்பள விஷயத்தில் பெரிய ஈடுபாடு  காட்டுவதில்லை என்றும், சமீபத்தில் ஒரு பெண் உதவி இயக்குனருக்காக இலவசமாக நடித்து கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்தப் படத்தைப் பற்றி யோகிபாபு, ‘அந்த டைரக்டர் என்னிடம் வந்து எனக்காக நீங்க ஒரு கதை பண்ணி கொடுக்கணும். ஆனா என்கிட்ட காசு இல்ல. இந்த படம் நடந்தால் தான் சார் எனக்கு கல்யாணமே நடக்கும்ன்னு சொன்னாங்க.

அதனால்தான், நான் அவங்களுக்கு அந்த படத்தை இலவசமாக நடித்து தருகிறேன். முதல்ல உனக்கு கல்யாணம் ஆகட்டும்ன்ணு சொன்னேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் இதனை அறிந்த யோகி பாபுவின் தீவிர ரசிகர்கள் “உங்களுக்கு இவ்வளவு இளகின மனசா” என்று பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

pei mama yogi babu

Continue Reading
To Top