Connect with us

Cinemapettai

தல தளபதி யார் ரியல் ஹீரோ..! பிரபல காமெடியன் அதிரடி பதில்!

Vijay-Ajith Dance

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல தளபதி யார் ரியல் ஹீரோ..! பிரபல காமெடியன் அதிரடி பதில்!

தல தளபதி பற்றி கூறிய யோகிபாபு..!

தமிழ் சினிமாவில் தற்போது காமெடி ரோல்களில் கலக்கி வருபவர் யோகி பாபு. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் ரசிகர்களை ரசிக்கும் வண்ணமாக உள்ளன. இவர் திரையில் வந்தால் போதும் இவரை பார்த்து சிரிக்கும் ரசிகர்கள் இங்கு ஏராளமாக உள்ளனர். இவரின் உடல் அமைப்பும் மற்றும் முடி அமைப்பு இவருக்கு பாசிடிவ் ஆக உள்ளது.

இவர் சமீபத்தில் பேட்டியளித்த ஒன்றில் தல தளபதி பற்றி கூறியுள்ளார். அதில் தலயும் தளபதியும் எனக்கு இரு கண்கள் மாதிரி என்று கூறியுள்ளார் இரு கண்களையும் பிரிக்க முடியாதது போல் இவர்கள் இருவரையும் என்னால் பிரித்து பேச முடியாது எனவும் கூறியுள்ளார்.

இவர் நடிப்பில் வெளிவந்த சர்க்கார் திரைப்படத்தைப் பற்றி விஜய் பற்றியும் கூறியுள்ளார். சர்கார் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இப்படத்தில் விஜய் சார் வரும் காட்சியில் சில நேரங்களில் அவரை கிண்டல் செய்யும் வசனங்கள் இருப்பதாகவும் அவரிடம் கூறியுள்ளார். இதனை நான் செய்யலாமா எனக் கேட்டபோது விஜய் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை நீங்கள் தைரியமாக கூறலாம் என கூறியுள்ளார்.

அதேபோல் தற்போது விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் காமெடி ரோலில் நடித்துள்ளார். அஜித் சார் கிண்டல் செய்யும் வசனங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதனை நான் திரையில் கூறலாமா எனவும் கூறியுள்ளார். அதற்கு அஜித் இது உங்கள் வேலை தைரியமாக நீங்கள் கூறலாம் என கூறியுள்ளார்.

பின்பு யோகி பாபு நான் சாதாரண நடிகனாகவும் ஆனால் என்னை இருவரும் மதித்து பக்கத்தில் அமர்ந்து வைத்து பேசியுள்ளனர் எனவும் கூறியுள்ளார். இவர்கள் இருவரிடமும் பல நற்குணங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை கேள்விப்பட்ட தல ரசிகர்களும் தளபதி ரசிகர்களும் உற்சாக வெள்ளத்தில் உள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top