Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹேர் ஸ்டைலில் யோகிபாபுக்கு போட்டியாக ரைசா வில்சன்.. குருவி கூடு தலை என்று கலாய்க்கும் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் ரைசா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தற்போது தமிழ் சினிமாக்களில் நடித்து வருகின்றனர். ஆனால் ரைசா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பிறகு கடந்த வருடம் வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை வசியப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் வெளிவராமல் முடங்கியது.

priyanka-yogi
அதன் பிறகு தற்போது ஜி.வி. பிரகாஷ் உடன் காதலிக்க யாருமில்லை என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் என்று படங்கள் கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் வெளியான தனுஷ் ராசி நேயர்களே படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா காதலிக்கின்றனர் என்ற செய்தி சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஹரிஷ் கல்யானுடன் டேட்டிங் செல்ல விரும்பியதாகவும் தெரிவித்திருந்தார். சமீபகாலமாக ரைசா கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன.
சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து நீங்கள் யோகிபாபுவின் தங்கச்சியா என்று கேட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் யோகிபாபு தலைமுடிக்கு போட்டியாக ரைசா வில்சன் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் என்று கலாய்த்து வருகின்றனர்.

raiza
