தனுஷை ஓரங்கட்டிய யோகிபாபு.. இந்தியளவில் ஆஸ்கருக்கு தேர்வான ஒரே தமிழ்படம்

வடிவேலு, விவேக், சந்தானம் போன்ற காமெடி நடிகர்களுக்கு பின்னர் தற்போது தமிழ் சினிமாவில் வலம் வரும் ஒரே ஒரு காமெடி நடிகர் என்றால் அது யோகி பாபு மட்டுமே. சோலோவாக காமெடியில் கலக்கி வரும் யோகி பாபு ஹீரோவாகவும் பல படங்களில் நடித்துள்ளார். அப்படி இவர் நடிப்பில் வெளியாகி பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்ற படம் தான் மண்டேலா.

திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக விஜய் டிவியில் இப்படம் வெளியானது. அதன் பின்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மண்டேலா படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போ ஏன் இதெல்லாம் சொல்றோம்னு தான யோசிக்கிறீங்க இந்த படத்துக்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைச்சிருக்கு. வாக்காளர் அடையாள அட்டையோட மதிப்பு என்ன? ஒரு ஓட்டோட மதிப்பு என்ன? என்பதை அரசியல் கலந்த நையாண்டியோடு இப்படத்தில் கூறியிருப்பார்கள். அந்த வகையில் இப்படம் நம்மை சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கும்.

யோகி பாபு நடிப்பில் சிறந்த படமாக பார்க்கப்பட்ட மண்டேலா படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை அதுதான். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு படங்களை தேர்வு செய்து அனுப்புவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு வித்யா பாலன் நடித்த ஷெர்னி, விக்கி கவுஷல் நடித்த சர்தார் உதம், மலையாளத்தில் மார்ட்டின் ப்ரகத் இயக்கிய நாயாட்டு உள்ளிட்ட 14 படங்கள் அனுப்பட்டுள்ளன. இதில் யோகி பாபு நடித்த மண்டேலா படமும் இடம்பெற்றுள்ளது. இதனால் யோகி பாபு மற்றும் படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

mandela
mandela

மேலும் ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகியுள்ள ஒரே ஒரு தமிழ் படம் என்ற பெருமையையும் மண்டேலா படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை மண்டேலா படம் ஆஸ்கார் விருதை பெற்று விட்டால் அதன் பிறகு யோகி பாபுவின் ரேஞ்சே வேற லெவல் ஆகிவிடும். தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் படம் ஆஸ்கர் விருது வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் இதையே ஓரம் கட்டிவிட்டார் யோகி பாபு என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்