Tamil Cinema News | சினிமா செய்திகள்
யோகிபாபுவை நாயை வைத்து விரட்டி விட்ட தயாரிப்பாளர்.. இன்று அவர் ஒரு நாள் சம்பளத்தை கேட்டால் தலைசுத்தும்!
யோகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யோகிபாபு. பருமனான தோற்றம், புள்ளிங்கோ ஹேர்ஸ்டைல் என்று அனைவராலும் கேலி கிண்டலுக்கு உள்ளானவர் யோகிபாபு.
ஆரம்ப கட்டத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் என்று பார்த்தால் அடுக்கிக் கொண்டே போகலாம், ஒரு படத்திற்கு நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளார். அதுவும் முழுமையாக கையில் கிடைக்காதாம்.
இப்படி அடிக்கு மேல் அடி வாங்கி வாய்ப்புகளைத் தேடி தெருத்தெருவாக அழைந்துள்ளார், ஒருமுறை தயாரிப்பாளர் வீட்டிற்கு சம்பளம் வாங்க சென்ற போது, இவரை திருடன் என்று நினைத்து அவரது மனைவி நாயை விட்டு துரத்தி உள்ளாராம். போலீஸ் ஒரு முறை சைக்கோ என்று கைது கூட செய்துள்ளனர்.
விஜய் டிவியின் பிரபல காமெடி நிகழ்ச்சியான லொள்ளு சபாவில் நடித்துள்ளார். அந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தவுடன் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்த யோகிபாபுவின் வாழ்க்கை தடம் மாறியது.
இவர் பிரபலமான கதாபாத்திரம் என்று பார்த்தால் யாமிருக்க பயமே என்ற படத்தில் பன்னி மூஞ்சி வாயான். இப்படி வாய்ப்புகள் பெற்று, இவர் நடித்து சூப்பர் ஹிட்டான படங்கள் என்று பார்த்தால் காக்கா முட்டை, ரெமோ, தானா சேர்ந்த கூட்டம், பரியேறும் பெருமாள், சர்கார், விஸ்வாசம், கோமாளி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் அசுர வளர்ச்சி பெற்ற யோகிபாபு, தற்போது நாள் ஒன்றுக்கு 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். அதுவும் தயாரிப்பு நிறுவனத்தை பொருத்து, பட்ஜெட்டை பொறுத்து இந்த தொகை மாறுமாம்.
ஒரு படத்திற்கு என்று பார்த்தால் 80 லட்சம் முதல் ஒரு கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். வரும் காலங்களில் முன்னணி நடிகர்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு யோகிபாபுவின் சம்பளம் உச்சத்தை எட்டினாலும் ஆச்சிரியப்பட தேவை இல்லை.
யோகி பாபு இந்த வருடத்தில் மட்டும் டிக்கிலோனா, சதுரங்க வேட்டை 2, பன்னிகுட்டி, கடைசி விவசாயி, பிஸ்தா என்று 16 படங்கள் நடித்தும் வருகிறார். முன்னணி காமெடி கதாபாத்திரமாக வலம் வரும் யோகிபாபு, தற்போது மெல்ல மெல்ல வடிவேலு இடத்தை நிரப்பி வருகிறார் என்று தான் கூற வேண்டும்.
இவரது வாழ்க்கையில் அடிப்பட்ட சம்பவம், சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு ஊன்றுகோலாக இருக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை.
