Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரே நேரத்தில் 35 படங்கள் ! தல அஜித்தின் விசுவாசம் தான் இவரின் 100 வது படமாம் !
தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கி வந்த வடிவேலு, சந்தானம் உள்ளிட்டவர்கள் ஹீரோவாக நடிக்கத் துவங்கிவிட்டார்கள். தற்பொழுது உள்ள சூழலில் தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடியன் என்று கணக்கு எடுத்தால், முதல் ஐந்து இடத்திற்குள் வந்துவிடுவார் நம் யோகி பாபு.
யோகி பாபுவின் ஒரிஜினல் பெயர் பாபுதான். அமீரின் ‘யோகி’ படத்தின் மூலம் அறிமுகமானதால், யோகி அவரது பெயரோடு ஒட்டிக்கொண்டது. இவரின் முதல் படம் யோகி என்றாலும், இவர் அதிகம் ரீச் ஆனதற்கு யாமிருக்க பயமேன் பண்ணி மூஞ்சி வாயாவும், மான் கராத்தேவின் வவ்வால் கதாபாத்திரமும் தான் காரணம். அடுத்தடுத்து பல படங்களில் ஒரே மாதிரியாக ரோலில் நடித்தாலும் ஆடியன்சை போர் அடிக்காமல் பார்த்துக் கொள்பவர் யோகி பாபு. வடிவேலுவுக்கு பின் உடல் அசைவால் காமெடி பண்ணும் நபர் இவர் தான்.
சினிமா தயாரிப்பாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததும் இவரின் பாடு தான் திண்டாட்டமாம். இவரின் கால் ஷீட் தேதிகளை அட்ஜஸ்ட் செய்து கொடுக்க இவரின் மானேஜர் திண்டாடி வருகிறாராம். ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 35 படங்களில் நடித்து வருகிறாராம். இதனை விட அதிக படங்கள் ஒரே நேரத்தில் நடித்த நடிகர் என்றால் அது வைகைப் புயல் வடிவேலு அவர்கள் தானாம். இந்த விஷயத்தை பற்றி கோலிவுட்டில் ஆச்சர்யமாக பேசி வருகின்றனர்.
யோகிபாபுவை பற்றிய இந்த இரண்டு அப்டேட்களும் இணையத்தில் பலராலும் ஷேர் மற்றும் லைக் செய்யப்பட்டுவருகின்றது.
