Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீங்கலாம் இப்பதான் ஸ்லிம் நாங்கலாம் ஆப்பவே ஸ்லிம்.! புகைப்படத்தை வெளியிட்டு அந்தர் பண்ணும் யோகிபாபு
நடிகர் யோகிபாபு தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார், இவருக்கு யாமிருக்க பயமேன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை தேடித்தந்தது, இதை தொடர்ந்து பல சிறு சிறு பட்ஜெட் படங்களில் நடிக்க தொடங்கினார்.

Yogi babu
இவரின் காமெடி மற்ற காமெடி நடிகர்களின் சாயல் இல்லாமல் கொஞ்சம் எதார்த்தமாக இருப்பதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது, இவருக்கு வரும் படங்களை முறையாக பயன்படுத்திக் கொண்டார் அதனால் இவர் முன்னணி காமெடி நடிகர் இடத்தை பெற்றார் இந்த நிலையில் இவருக்கு கடந்த வருடத்தில் மட்டும் 12 படங்கள் வெளியாகி உள்ளன அதில் 8 திரைப்படங்கள் வெற்றியைக் கொடுத்துள்ளது அதிலும் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் யோகி பாபுவிற்கு கொடுக்கப்பட்ட பாடல் எப்படி ஹிட் ஆனது என அனைவருக்கும் தெரியும்.
இவர் ஒரு காலத்தில் பட வாய்ப்பு தேடும் போது குண்டாக இருக்கிறார் என்று நிராகரித்தார்கள் ஆனால் அது அவருக்கு தற்போது பிளஸ் ஆக மாறிவிட்டது, இவர் பாடி லாங்குவேஜ்ம் ஹேர் ஸ்டைலும்அதிகமாக ரசிகர்களிடம் ரசிக்க வைத்துள்ளது.
இந்த நிலையில் டிவிட்டரில் திடீரென தான் ஒல்லியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நாங்களும் ஒன்லி தான் ஒரு காலத்தில் எனக்குறிப்பிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு ஒல்லியாக இருப்பது யோகிபாபுவா என ஆச்சிரியப்படுகிறார்கள்.
