Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் ஹீரோவாகிறார் யோகி பாபு – அதிக ஆர்வத்தையும்; அதே சமயத்தில் குழப்பத்தையும் தந்துள்ளது டைட்டில் மற்றும் போஸ்டர்.

ஹீரோ என சொல்வதை விட முதன்மை கதாபாத்திரம் என்று சொல்லலாம். ஏனென்றால் யோகி பாபு இனிமே ஹீரோவாக நடிக்க மாட்டேன் என்றும் சொல்லிவிட்டார். தர்மபிரபு, கூர்க்கா ரிலீஸ் ஆகிவிட்டது. அடுத்ததாக ஜாம்பி ரெடியாக உள்ளது.

இந்நிலையில் யோகிபாபு நடிக்கும் புதிய படம் “மண்டேலா” இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இயக்குனர் பாலாஜி மோகன் “ஓபன் விண்டோ” என்ற கம்பெனி வாயிலாக தயாரிக்கிறார். வை நாட் ஸ்டுடியோஸ், விஷ் பெர்ரி பிலிம்ஸ், ரிலையன்ஸ் எண்டெர்டைன்மெண்டும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப்படத்தை புதுமுக இயக்குனர் மடோன் அஷ்வின் (2013 இல் வெளியான தர்மம் குறும்படம் வாயிலாக ரீச் ஆனவர்) இயக்குகிறார். ஒளிப்பதிவு விது அய்யன்னா. இசை பரத் ஷங்கர், எடிட்டிங் பிலோமின் ராஜ்.

yogibabu in mandela

யோகிபாபுவுடன், சங்கிலி முருகன், கண்ணா ரவி, ஷீலா ராஜ்குமார், சுந்தர் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர் திருநெல்வேலி, தூத்துகுடி பகுதிகளில் இப்படத்தின் ஷூட்டிங் நடக்கவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top