fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கண்ணீர் விடும் யோகி பாபு.. இப்படி சிக்கல்ல மாட்டி விட்டானுங்களே

yogibabu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கண்ணீர் விடும் யோகி பாபு.. இப்படி சிக்கல்ல மாட்டி விட்டானுங்களே

முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் தர்ம பிரபு. இப்படத்தில் ரமேஷ் திலக், ராதாரவி, மொட்டை ராஜேந்திரன், ஜனனி ஐயர் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தாலும் தற்போது இந்தியாவில் நடக்கும் அரசியல் சூழ்நிலைகளையும் எடுத்துச் சொல்வது போல் கதைகள் அமைந்துள்ளது.

அதிமுக அரசின் சில திட்டங்களுக்கு அறிவுரை கூறி வந்தவர் நடிகர் சோ. தற்போது படத்தில் இந்த மாதிரியான கதாபாத்திரத்தை வைத்து கதைக்களம் நகர்கிறது. பலரும் அதிமுக அரசின் செயல் திட்டங்களையும் பாஜக அரசின் செயல் திட்டங்களையும் இழிவுபடுத்தும் வகையில் படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தற்போது இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.மேலும் இப்படத்தில் மத கடவுள்களை மையப்படுத்தி எடுத்துள்ளதாகவும் மற்ற மதத்தை தூக்கி பிடித்து இந்து மதத்தை இழிவு படுத்துவது போல் காட்சி இடம்பெற்று உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த மாதிரியான காட்சிகள் இருக்கும் போது ஏன் சென்சார்போர்டு படத்தில் காட்சிகளை ஏன் நீக்கவில்லை என கேள்வி எழுப்பி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு தரப்பில் அரசியல் பிரமுகர்களும்,மற்றொரு தரப்பினர் இந்து முன்னணி சேர்ந்தவர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதனால் தர்ம பிரபு படம் தற்போது பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இதனால் படக்குழுவினர் தற்போது கடும் கோபத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top