Connect with us

Cinemapettai

யோகிபாபுவுடன் எனக்கு திருமணமா? நடிகை வெளியிட்ட வீடியோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

யோகிபாபுவுடன் எனக்கு திருமணமா? நடிகை வெளியிட்ட வீடியோ

சினிமா பிரபலங்களில் வாழக்கையில் சில விஷயங்கள் அவர்களுக்கு தெரியாமல் நடந்து விடும். அந்த நபரே மீடியாவில் பார்த்து தான் தெரிந்துகொள்ளும் சூழல் நம் ஊரில் உள்ளது. அன்றும், இன்றும் பல உதாரணம் நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். சமீபத்தில் கூட மீனா வீட்டை வாங்கிய சூரி, யோகி பாபு ரகசிய திருமணம், தளபதி 64 பட டைட்டில் என லிஸ்ட் பெருசு.

யோகிபாபுவின் டிவிட்டேர் பக்கத்தில் ப்ளூ டிக் இல்லாததே இந்த வந்தது பரவ காரணம். யோகி பாபு பெயரில் உள்ள போலி கணக்கு அட்மின் செய்த வேலை கோடம்பாக்கம்  அதிரிபுதிரி ஆகிவிட்டது. முதலில் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில் #அவளும_ நானும் என்ற ஹேஸ்டேக்கும் இருந்தது. இதற்கு வருங்கால மனைவியா என கேள்வி கேட்டு வந்தனர்.

அடுத்த பதிவில், “திறமைக்கு தான் எல்லாமே. இல்லாட்டி எனக்கு இப்படி அழகான மனைவி கிடைச்சு இருக்குமா. அதனால திறமையை மனைவி வழங்குகிற உங்களை எல்லாம் தானே தேடிவரும். இது என்னுடைய அட்வைஸ். கேட்டா கேளுங்க, நல்லா இல்லாட்டி விட்ருங்க.” என்பது.

உடனே இந்த விஷயம் வைரலானது. எனினும் தனது ட்விட்டர் பக்கத்தில் திருமணம், மனைவி பற்றிய அனைத்து வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் பாபு.

அந்த போட்டோ கன்னிராசி பட ஷூட்டிங் பிரேக்கில் எடுக்கப்பட்ட செலஃபீ. அந்த புகைப்படத்தில் யோகிபாபுவுடன் இருந்த நடிகை சபிதா ராய் இந்த வதந்தி பற்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top