Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நயன்தாராவை காதலிக்கும் யோகிபாபு… கடுப்பில் விக்னேஷ் சிவன்

கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் டூயட் பாடிய யோகி பாபுவிற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் குத்து விட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தற்போது நாயகி முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நயந்தாரா நடித்து வருகிறார். அறிமுகமான புதிதில் ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நாயகர்கள் படத்தில் மட்டுமே நடித்த நயன் சமீபகாலமாக சிங்கிள் நாயகி படத்தில் அதிகமாக நடித்து வருகிறார். அதே வேளையில், நடிகர்களுடன் இணைவதையும் தவிர்ப்பது இல்லை. இதனால் ரசிகர்கள் இவரை லேடி சூப்பர்ஸ்டார் என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

தற்போது, அஜித்தின் விஸ்வாசம் படம், அதர்வா நடிப்பில் உருவாகும் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், அறிவழகன் படம், சர்ஜுன் படம், எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவாவுடன் ஒரு படம், நெல்சன் இயக்கும் கோலமாவு கோகிலா, மலையாளத்தில் நிவின் பாலியுடன் லவ் ஆக்ஷன் டிராமா, இயக்குனர் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ஹா ரெட்டி, மகேஷ் வெட்டியாரின் கோட்டயம் குர்பானா என தொடர்ச்சியாக பிஸியாக நாயகியாக வலம் வருகிறார்.

நடிப்பு ஒரு பக்கம் இருக்க தனது காதல் வாழ்க்கையையும் அசால்ட்டாக எடுத்து செல்கிறார். இவருக்கும், கோலிவுட்டின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் என கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் இந்த தகவலை இதுவரை மறுத்ததே இல்லை என்பதால் காதல் உறுதி தான் என ரசிகர்கள் முடிவே செய்து விட்டனர். ஒரு பக்கம் இருவரும் பிஸியாக படங்களில் வேலை செய்து வந்தாலும், காதல் நேரத்தையும் மறப்பது இல்லை. அடிக்கடி அமெரிக்கா பறந்து விடும் இந்த இளம் கிளிகள் ஒரு செல்பியை கிளிக்கி வெளியிட்டு வைரலாகி விடுவர்.

இந்நிலையில், நயன் நடிப்பில் கோலமாவு கோகிலா படத்தின் கல்யாண வயசு சிங்கிள் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இப்படத்தில் நயனுக்கு ஜோடி இல்லை என்றாலும் படத்தில் முக்கிய வேடம் ஏற்று இருக்கும் யோகி பாபு நயனிடம் காதலை சொல்லும் பாடல் தான் இது. இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி இருக்கிறார். இந்த வீடியோவை தனது இணையத்தில் கொஞ்சம் கடுப்புடன் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், நயனுக்கு லவ் ஸ்மைலி, அனிருத்துக்கு முத்த ஸ்மைலி, இயக்குனர் மற்றும் சிவாவிற்கு சூப்பர் ஸ்மைலியை போட்டு இருக்கிறார். ஆனால், காதலை சொன்னதற்காக யோகி பாபுவிற்கு கோபமான ஸ்மைலியுடன் ஒரு குத்தும் விட்டு இருக்கிறார். இப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஓ இதான் பொஸசிவ்வா?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top