தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் செம்ம பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் ரிலிஸாகவுள்ளது அட்லீ இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்..

விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்க, காஜல், சமந்தா, நித்யா மேனன் அவருக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.இப்படத்தின் யோகிபாபு ஒரு சில காட்சிகள் நடித்துள்ளாராம், விஜய்க்கு ஏற்கனவே யோகிபாபு காமெடி என்றால் மிகவும் பிடிக்குமாம்.

அதனால், விஜய் மெர்சல் படத்தில் அவரின் காட்சிகளில் வசனம் அவருக்கே அதிகமாக கொடுங்கள் என்று கூறினாராம்.

விஜய்-யோகிபாபு காட்சிகள் படத்தில் செம்ம கலாட்டவாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஒரு முன்னணி நடிகர் தனக்கு நிறைய இடம் கொடுத்து நடிப்பதை கண்டு யோகிபாபு நெகிழ்ச்சி அடைந்தாராம்