Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வடிவேலு பதிலாக ஹீரோவான யோகி பாபு- கலக்கலான பர்ஸ்ட் லுக் வெளியாகிவிட்டது போடா

வைகைப்புயல் வடிவேலு அவர்கள் கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்த்து பார்த்து ஏமாற்றம் அடைந்தது தான் மிச்சம். காமெடி ரோல் என்பதனை விட ஹீரோவாக சில பல ப்ரொஜெக்ட்டுகள் கமிட் ஆனார். இம்சை அரசன் பார்ட் 2 , பேய் மாமா என சென்றது லிஸ்ட். ஆனால் எதுவும் டேக் ஆப் ஆகவில்லை.

இங்கிலீஷ்காரன், சார்லி சாப்ளின் இரண்டு பார்ட், வியாபாரி, என்னம்மா கண்ணு போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் சக்தி சிதம்பரம். தன் நக்கல், நய்யாண்டிக்கு பெயர் போனவர். இவர் இயக்கத்தில் தான் வடிவேலு ஹீரோவாக பேய் மாமா படத்தில் நடிப்பதாக இருந்தது.

இப்படத்தில் யோகி பாபு கமிட் ஆகி நடித்து முடித்துவிட்டாராம். நேற்று மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டார். கொரோனா பீதியில் மக்கள் இருக்க, நாங்க வரோம் என்ற வசனம் பேட்டில் உள்ளது. பேக் ட்ராப்பில் மாஸ்க் அணிந்துள்ளனர் சில ஆவிகள். மேலும் சமீபத்தில் பிரபலமான ‘இந்தி தெரியாது போடா’ என்கிற வாசகத்தை உல்ட்டா செய்து ‘எனக்கு இந்தி, தமிழ், தெலுங்கு எதுவுமே தெரியாது போடா’ என்று போட்டுள்ளனர்.

yogi babu in pei mama

இந்த போஸ்டரில் உள்ள பேய் மாமா லோகோ கூட நம்ம ஜுராசிக் பார்க் படங்களில் இருந்து சூட்டது என 90 ஸ் கிட்ஸ் அப்பட்டமாக கண்டு பிடித்துவிட்டனர்.

jurassic park

பாக்கியா சினிமாஸ் சார்பில் விக்னேஷ் எல்லப்பன் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு பன்னீர் செல்வம், ராஜ் ஆர்யன் இசை, ப்ரீத்தம் எடிட்டிங், வசனங்களை ராஜகோபால் எழுதியுள்ளார். போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்து வரும் இப்படம் லேட்டஸ்ட் ட்ரெண்ட் ஆனா OTT ரிலீஸ் செல்லுமா அல்லது திரை அரங்க ரிலீசா என்பது கூடிய விரைவில் தெரியவரும்.

Continue Reading
To Top