Videos | வீடியோக்கள்
போற உசுரு போராடி போகட்டும்.. ஆஸ்கர் லெவல் நடிப்பில் பின்னி பெடல் எடுக்கும் யோகி பாபுவின் பொம்மை நாயகி ட்ரெய்லர்
யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் பொம்மை நாயகி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
மண்டேலா படத்தின் மூலம் ஹீரோவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த யோகி பாபு அதன் பின்பு சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் இப்போது அவர் பொம்மை நாயகி என்ற படத்தில் நடித்துள்ள ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
பொம்மை நாயகி படத்தை பா ரஞ்சித்தின் நிலா புரொடக்ஷன் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்த தயாரித்துள்ள நிலையில் ஷான் எழுதி இயக்கியுள்ளார். திரைப்படம் அப்பா மற்றும் மகள் இடையே ஆன பிணைப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. படம் வருகின்ற பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாக உள்ளது.
Also Read : ரெமோ சிவகார்த்திகேயன் போல புதிய வேடத்தில் யோகி பாபு.. வைரலாகும் பர்ஸ்ட் லுக் போட்டோ
இந்நிலையில் ட்ரெய்லரில் யோகி பாபு தனது மனைவி மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். அப்போது தன்னுடைய மகள் காணாமல் போன நிலையில் தேடும் தந்தையின் தவிப்பு மற்றும் போராட்டத்தை அழுத்தமாக சொல்லி உள்ளது. ட்ரைலரை வைத்து பார்க்கும் போது யோகி பாபு ஆஸ்கர் லெவல் நடிப்பில் பின்னி பெடல் எடுத்துள்ளார்.
மேலும் தப்பு செஞ்சவனெல்லாம் சந்தோஷமா இருக்கலாம், பாதிக்கப்பட்டவங்க தான் கஷ்டப்படுறாங்க, போற உசுரு போராடியே போகட்டும் என்ற வசனங்களும் ரசிகர்களை கவரும் விதமாக படத்தில் இடம்பெற்றுள்ளது. யோகி பாபுக்கு இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்.
Also Read : நாகேஷ் இடத்தை சிக்குனு பிடித்த யோகி பாபு.. இவரைப் பார்த்து கத்துக்கோங்க காண்ட்ராக்டர் நேசமணி
மேலும் எப்போதுமே யோகி பாபுவின் படங்கள் கலகலப்பான காமெடி காட்சிகள் இடம் பெற்று வந்த நிலையில் பொம்மை நாயகி படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்துள்ளது. இந்த ட்ரெய்லரின் மூலம் ரசிகர்களுக்கு படத்தை பார்க்கும் ஆர்வம் தூண்டி உள்ளது.
Also Read : தயாரிப்பாளர்களாக விஸ்வரூபம் எடுக்கும் 3 இயக்குனர்கள்.. யோகி பாபுவை வைத்து ஆரம்பிக்கும் அஜித் பட இயக்குனர்
