Videos | வீடியோக்கள்
கொடூர நாயிடம் நடுக்காட்டில் மாட்டிக் கொண்ட சுனைனா, யோகி பாபு.. கலாட்டா பண்ணும் ட்ரிப் பட டீஸர்
Published on
நீண்ட நாட்களாக முன்னணி நடிகையாக வர முடியாமல் திணறி கொண்டிருப்பவர் நடிகை சுனைனா. அழகு, திறமை இருந்தும் கதை தேர்வில் சொதப்பி இன்னும் தமிழ் சினிமாவில் முன்னேற முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.
சுனைனா பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ட்ரிப். யோகிபாபு, கருணாகரன், சுனைனா மற்றும் பலர் நடிப்பில் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடுக்காட்டில் நடைபெறும் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் உருவாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் உலகிலேயே மிகக் கொடூர நாயுடன் இந்த படத்தில் சுனைனா நடித்திருப்பதால் இந்த படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் எகிறி உள்ளன. தற்போது ட்ரிப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படம் கண்டிப்பாக சுனைனாவுக்கு பெரும் திருப்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
