Connect with us
Cinemapettai

Cinemapettai

கமலஹாசனின் வித்தியாசமான கதாபாத்திரத்தை கையில் எடுத்த யோகிபாபு.. மனுஷனுக்கு ரொம்ப தைரியம் தான்.!

yogi babu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கமலஹாசனின் வித்தியாசமான கதாபாத்திரத்தை கையில் எடுத்த யோகிபாபு.. மனுஷனுக்கு ரொம்ப தைரியம் தான்.!

வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் பெரும் கஷ்டங்கள் அவமானங்களை தாண்டிதான் அவர்களுக்கான ஒரு இடத்தை தக்க வைத்து கொள்கிறார்கள். அவ்வாறு முன்னேறியவர்கள் உயரத்தை பார்க்கும் நாம் அவர்களின் கடின உழைப்பையும் முயற்சியையும் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

அந்த வகையில் தற்போது காமெடியாக இருக்கும் யோகி பாபுவின் சுவாரஸ்யமான செய்திகளை பற்றிய தெரிந்துகொள்வோம்.

இவர் ஒரு ராணுவ குடும்பத்திலிருந்து வந்தவர் ஆவார். மேலும் பல தடைகளை தாண்டி தான் சினிமாவில் வெற்றி அடைந்துள்ளார். யோகி பாபு முதன் முதலாக தொலைக்காட்சியில் தான் அறிமுகமானர். சித்தார்த் சிவசாமி என்பவர்தான் முதலில் யோகிபாபுவை லொள்ளு சபா நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றார். அங்கு இயக்குனர் ராம்பால யோகிபாபுவை நடிப்பதற்காக அழைத்துக்கொண்டார்.

2009 ஆம் ஆண்டு வெளிவந்த யோகி என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் தன் பெயரை யோகிபாபு என்று மாற்றிக் கொண்டார். இதையடுத்து பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருப்பினும் பலரால் பலவாறு கஷ்டப்படும் அவமானப்படும் தன்னுடைய விடா முயற்சியால் தற்போது வெற்றி அடைந்துள்ளார்.

yogibabu-cinemapettai

yogibabu-cinemapettai

அதைத்தொடர்ந்து யாமிருக்க பயமேன் திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

தற்போது ஒரு புது அவதாரத்தில் நடிக்க இருக்கிறார் யோகிபாபு. அவ்வை சண்முகி படம் முழுவதும் பெண் வேடத்தில் இருப்பதை போல, முதன்முறையாக யோகிபாபு பெண் வேடத்தில் நடிக்க இருக்கிறார். இவருடைய டைமிங் காமெடிகளை ரசிகர்கள் அதிகம் வரவேற்று இருந்தனர். அதேபோல இந்த புது கெட்டப் ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top