சென்னையில் பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் இன்போசிஸில் பணிபுரியும் சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டது தமிழக மக்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்தது யார் என கண்டுபிடிக்க போலீசார் இன்னமும் திணறி வருகின்றனர்.இந்த கொலை பற்றி ஒய்.ஜி.மகேந்திரன் கூறிய கருத்து தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “சுவாதி பிராமின் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தான், இந்த கொலை பற்றி அரசியல் காட்சிகள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை” என தன் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார்.

பலரையும் வெறுப்பேற்றிய இந்த பதிவு பற்றி சில மணி நேரங்கள் கழித்து அவரே விளக்கமளித்துள்ளார்.

ygm ygm2