Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாமா வேலையை மாத்தி பார்த்த பிக் பாஸ்… திட்டத்தை அம்பலப்படுத்திய நெட்டிசன்கள்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடு நெட்டிசன்களுக்கு பெரும் தீயாய் அமைந்திருக்கிறது. ஏனெனில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி சண்டை, கலகலப்பு, ரொமான்ஸ் போன்றவற்றிற்கு பஞ்சமே இல்லாமல் கலை கட்டியது.
மேலும் ரியோவும் நிஷாவும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதல் நாளில் இருந்தே அக்கா தம்பியாக பழகி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டின் சுவாரஸ்யத்தை சற்று கூட்டும் வகையில் நேற்று புதிதாக கொடுக்கப்பட்ட ‘பாட்டி சொல்லை தட்டாதே’ என்ற டாஸ்க்கில் ரியோவையும் நிஷாவையும் கணவன்-மனைவி ரோலில் நடிக்க வைத்தார் பிக் பாஸ்.
மேலும் அர்ச்சனா பாட்டியின் மகளான நிஷாவும் மருமகனான ரியோவும் சயின்டிஸ்ட் என்றும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார் பிக் பாஸ்.
இதனால் இருவரும் ஆங்கிலத்தில் பேசுவதோடு மட்டுமல்லாமல் வரிக்குவரி டார்லிங் டார்லிங்.. என்று அழைத்துக் கொண்டு நேற்றைய எபிசோடு முழுவதும் வீட்டையை கலகலக்க வைத்தனர்.

rio-nisha-cinemapettai
இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலர், ‘யாருக்கு யாரு என்ன உறவுன்னு தெரியலையே.. என்ன ஆண்டவா இப்படி போட்டு குழப்பிடீங்க!’ என்று புலம்பித் தள்ளுகின்றனர்.
