நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் மற்றும் சென்னை அணி மோதின, இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்திருந்தது அடுத்ததாக களம் இறங்கிய சென்னை அணி 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.

சென்னை அணியின் சிறப்பான ஆட்டத்தால் 19 ஓவர்களிலேயே தனது இலக்கை ஈசியாக பெற்று வெற்றிவாகை சூடியது. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு 2 வது அணியாக உள்ளே நுழைந்துள்ளது இந்த வெற்றியை பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஹர்பஜன் தனது பாணியில் சென்னை அணியை பாராட்டியுள்ளார்.அவர் தனது டிவிட்டரில் கூறியதாவது “ஓங்கி இடிஇடித்து,ஓயாமல் மின்னல் வெட்டி,பல மணிநேரம் நிக்காமல் நெரம்பபபெய்த,வரதா புயலால் சென்னைய ஒன்றும் செய்ய இயலவில்லை.பதினொன்று வீரர்களை கொண்டு எங்களை சாய்த்து விடலாம் என்று பார்த்தாயா.இது தலை நிமிர்ந்து நடை போடும்” என கூறியுள்ளார்.