சீரியல் நடிகைகளில் இப்போது சீக்கிரம் முக்கியத்துவம் பெற்றவர் நடிகை ரம்யா. சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், மாப்பிள்ளை என இவரது லிஸ்ட் நீள்கிறது.

இவர் சமீபத்தில் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவரின் கதாபாத்திரம் பற்றி கேட்ட போது ஒரு உண்மையை சொல்லியிருக்கிறார்.

ஆம் நான் ரஃப் அண்ட் டஃப் டைப்பான ஆள். படங்களில் அழுகை காட்சிகள் வந்தாலே தேம்பி தேம்பி அழுவேன். என்னை பொறுத்தவரை அமைதியாகவே பல நேரங்களில் இருப்பேன். இதை தான் அப்படி எடுத்துகிறாங்க.

லேட்டாக தான் யாரிடமும் நண்பராவேன். கமல் மன்மதன் அம்பு படத்தில் திறமைக்கு திமிர்த்தனம் கொஞ்சம் வேலி என்று சொல்லியிருப்பார்.

அதுபோல தான். இடங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வதால் பிரச்சனைக்கு இடமில்லை என அவர் கூறியிருக்கிறார் ரம்யா.