Connect with us

Cinemapettai

என்னை அறிந்தால் 2-க்கு அனைத்து வேலைகளும் முடிந்தது.. இந்தமுறை அருண்விஜய்க்கு பதில் இந்த முரட்டு வில்லன்

ajith-yennai-arinthaal-2-movie

Tamil Cinema News | சினிமா செய்திகள்

என்னை அறிந்தால் 2-க்கு அனைத்து வேலைகளும் முடிந்தது.. இந்தமுறை அருண்விஜய்க்கு பதில் இந்த முரட்டு வில்லன்

2015-ல் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் வெளிவந்தது ‘என்னை அறிந்தால்’. இந்த படத்தில் அஜீத் குமாருடன் சேர்ந்து அருண் விஜய், த்ரிஷா அனுஷ்கா ஷெட்டி, பார்வதி நாயர், பேபி அனிகா, விவேக் போன்ற பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.

தமிழ் சினிமாவில் அருண் விஜய்க்கு இந்த படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் இன்னும் வலு சேர்த்தது என்றே கூறலாம். தற்போது விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படத்தின் டப்பிங்கிள் பிஸியாக உள்ள கௌதம் வாசுதேவ் மேனன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில பத்திரிக்கை இன்ஸ்டாகிராம் லைவ் மூலம் உரையாடல் செய்துள்ளார்.

அந்த உரையாடலின் போது என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை, இந்த ஊரடங்கு காலத்தில் எழுதி முடித்து விட்டதாகவும். கதை மிக நன்றாக வந்துள்ளதாகவும், கதாபாத்திரத்தின் அடுத்த கட்டத்தை வெளிப்படுத்துவதாக இந்த கதைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்.

விரைவில் அஜித்திடம் இந்த கதையை கூறி எடுக்கப்படும் என்று கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். ரசிகர்களிடையே மாபெரும் வெற்றிபெற்ற என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதில் மிகவும் சவாலாக இருந்ததாக கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக இந்த படம் நிறைவேற்றுவதாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் முதல் பாகத்தில் அருண் விஜய் காதாபாத்திரம் முடிந்ததாம். இரண்டாம் பாகத்தில் அர்ஜுன் தாஸ், விஜய் சேதுபதி மற்றும் பிரபல நடிகர் சுதீப்பிடம் பேச்சி வார்த்தை நடக்கிறதாம். ஆக வேற மாதிரி வில்லன் வர போவது உறுதி.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top