yeman
 விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் படம் 2 நாட்களில் ரிலீஸ் ஆக இருந்த சூழலில், படத்தின் முதல் 10 நிமிடங்க ளை ரிலீஸ் செய்தார்கள். படத்தின் ரிலீசுக்கு முதல் நாள் அடுத்த 5 நிமிட படத்தை ரிலீஸ் செய்தார்கள்.

விஜய் ஆண்டனி இதை ஒரு வியாபார யுக்தியாக செய்து ரசிகர்களை படம் பார்க்க தியேட்டருக்கு வரவழைத்தார்.

இப்போது, அதே உத்தியை எமன் படத்திற்கும் செய்துள்ளார். சைத்தான் படத்தின் டீசர், ட்ரைலரை வெட்ட முடியவில்லை என்பதால், 15 நிமிச படத்தை லீக் செய்தோம் என்று அப்போது பதில் சொன்ன விஜய் ஆண்டனி, இப்போது என்ன சொல்லப்போகிறார் என்று தெரியவில்லை.

ஏனென்றால், நாளை ரிலீஸ் ஆக போகும் எமன் படத்திற்கு 2 நிமிட படத்தை இப்போது லீக் செய்துள்ளார்கள்.