முட்டையின் மஞ்சள் கருவை தவிர்த்துவிடும் வழக்கம் உங்களுக்கு இருந்தால், இந்த செய்தியை தொடர்ந்து படியுங்கள்…

அசைவம் சாப்பிடாதவர்கள் கூட, முட்டை சாப்பிடுவது வழக்கம். காரணம், இறைச்சியில் நிகரான கொழுப்பு, புரதச் சத்தினை முட்டை அளிக்கிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களாலும், உடனடி புரதம், கொழுப்புக்கான நிவாரணியாக முட்டை பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், இன்றைய காலத்தில், முட்டையின் மஞ்சள் கருவில் அதிக கொழுப்புச் சத்து உள்ளதாகவும், அதனைச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால், பலர் மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு, வெள்ளைக் கருவை மட்டும் பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது.

உண்மையில், மஞ்சள் கருவில்தான் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, ஈ மற்றும் டி ஆகியவை முட்டையின் மஞ்சள் கருவில் நிரம்பியுள்ளன. இது மட்டுமின்றி, அமினோ அமிலங்கள், கோலின், செலினியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துகளும் மஞ்சள் கருவில் நிரம்பி காணப்படுகின்றன.

இதனால், முட்டையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதால், நாம் விரும்பும் உடலை பராமரிக்க முடியும். மேலும், ஆரோக்கியமான உடலமைப்பை பின்பற்றி, நல வாழ்வு வாழ முடியும்…