fbpx
Connect with us

காட்டு எருமையின் மேல் துப்பாக்கியுடன் யாஷிகா வெளியிட்ட புகைப்படம்.. வித்தியாசமே தெரியல, என கலாய்க்கும் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காட்டு எருமையின் மேல் துப்பாக்கியுடன் யாஷிகா வெளியிட்ட புகைப்படம்.. வித்தியாசமே தெரியல, என கலாய்க்கும் ரசிகர்கள்

“கவலை வேண்டாம்” என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில்  அறிமுகமானவர்தான் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு இவர் துருவங்கள் பதினாறு, நோட்டா, கழுகு 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இவர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் படத்தின் மூலம்  ரசிகர்களிடம் நன்கு பிரபலம் அடைந்ததோடு, தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார்.

அதற்குப்பிறகு, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார் யாஷிகா.

இந்த நிலையில் யாஷிகா தற்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வித்யாசமான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னதான் யாஷிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இதனால், யாஷிகா பட வாய்ப்பை பெறலாம் என்ற எண்ணத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஏனென்றால், தற்போதெல்லாம் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பவர்களுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருப்பது வழக்கமாகிவிட்டது.

அந்தவகையில், யாஷிகா தற்போது எருமை மாட்டின் மேல் துப்பாக்கியை ஏந்தியவாறு எடுத்துள்ள புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

yashika-gun

yashika-gun

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலர், ‘வித்தியாசமே தெரியல எனக்கு’ என்று யாஷிகாவை கலாய்த்து வருகின்றனராம்.

Continue Reading
To Top