Connect with us
Cinemapettai

Cinemapettai

yashika-car-accident

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விபத்தில் சிக்கியும் திருந்தாத யாஷிகா.. நீதிமன்றத்திற்கே டேக்கா கொடுத்ததால் ஏற்பட்ட விபரீதம்

யாஷிகா ஆனந்த், சொன்ன தேதிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அதிரடி உத்தரவிட்ட நீதிபதி.

மாடல் அழகி யாஷிகா ஆனந்த் சில வருடங்களுக்கு முன் ஈசிஆர் ரோட்டில் அதிவேகமாக காரில் சென்றதால் விபத்தில் சிக்கி, அவரது தோழி பரிதாபமாக உயிரிழந்தார். அவரும் படுகாயம் அடைந்து பல மாதங்களாக மருத்துவமனையில் இருந்து எப்படியோ உயிர் பிழைத்து தப்பித்து விட்டார் 

தற்போது யாஷிகா ஆனந்த் முழுவதுமாக குணமடைந்து சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் சில படங்களிலும் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுத்தியதற்காக யாஷிகாவின் மீது பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு வந்திருக்கிறது.

Also Read: மனசு வலிக்குது, முதுகுல குத்திட்டாங்க.. லிவிங் டு கெதர் பிரேக்கப் செய்த காரணத்தை அம்பலப்படுத்திய யாஷிகா

ஏற்கனவே விபத்தில் சிக்கி உயிர் பிழைத்ததே அரிதாகிவிட்ட நிலையில் தற்போது ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கும் யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்திற்கே டேக்கா கொடுக்க பார்த்திருக்கிறார்.

இதனால் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் வரும் 25ம் தேதிக்குள் யாஷிகா ஆனந்த் ஆஜராக வேண்டும், இல்லை என்றால் அவரை கைது செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவிட்டிருக்கிறது. மேலும் யாஷிகா ஆனந்த்திற்கு இதுவரை பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

Also Read: போட்டி போட்டு ஸ்விம் சூட்டில் கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகைகள்.. வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்

அதனால் சர்ச்சைக்குரிய படங்களில் நடித்து பெரிதும் விமர்சிக்கப்பட்டார். இப்போது விபத்திற்கு பிறகு மறுபடியும் கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு கொண்டிருந்த யாஷிகா ஆனந்த், ஒரு சில பட வாய்ப்புகளையும் பெற்றுக் கொண்டிருந்தார். 

இந்த நிலையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் சிக்கிய யாஷிகா, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிம்கி அடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் இரண்டு நாட்களில் ஆஜராகவில்லை என்றால் அவரை அதிரடியாக போலீஸ் கைது செய்ய வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

Also Read: தியேட்டரில் முகம் சுழிக்க வைத்த 5 அடல்ட் படங்கள்.. சீரழிந்து சின்னாபின்னமாகும் சினிமா

Continue Reading
To Top