Connect with us
Cinemapettai

Cinemapettai

yashika-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

போலீஸ் கெட்டப்பில் மிரள விடும் யாஷிகா.. வில்லனாக அவதாரம் எடுக்கும் சூப்பர் ஹிட் இசையமைப்பாளர்

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவர் தான் மாடல் அழகியும் நடிகையுமான யாஷிகா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்தபின்பு, யாஷிகாவிற்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது.

இதுவரை இவர் நடித்து வந்த படங்களில் எல்லாம் கவர்ச்சிப்புயலாகவே சிறு சிறு வேடங்களில் களம் இறங்கிய யாஷிகா, தற்போது ‘சல்பர்’ என்ற படத்தில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கன்ட்ரோல் ரூமிற்கு வந்த அழைப்பின் மூலம்,

கடத்தல் வழக்கு ஒன்றை கண்டுபிடிக்கும் பொறுப்புள்ள அதிகாரியாக நடிப்பதால் இதுவரை பார்க்காத யாஷிகாவை வித்தியாசமான கோணத்தில் இந்தப் படத்தின் மூலம் பார்க்கலாம்.  அதுமட்டுமில்லாமல் யாஷிகா ஆனந்திற்கு வில்லனாக பிரபல இசையமைப்பாளர் சித்தார்த் விபின் நடிக்கவுள்ளார்.

salper-cinemapettai

இவர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ஹலோ நான் பேய் பேசுகிறேன்’, ‘ஜூங்கா’, ‘கேப்மாரி’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

siddharth-Vipin-cinemapettai

அதைப்போல் நடிப்பிலும் ஆர்வமுடைய சித்தார்த் விபின், ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தற்போது வில்லனாக நடிப்பதற்கு இவர் தற்போது கூத்துப்பட்டறை மூலம் நடிப்பு பயிற்சி பெற்றுள்ளாராம்.

மேலும் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் காமெடியனாக நடித்த சித்தார்த் விபின், தற்போது வில்லனாக யாஷிகாவுடன் இணைந்து நடிக்கும் வித்தியாசமான காம்போவில்  உருவாகவிருக்கும் சல்பர் படத்தின் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Continue Reading
To Top