Tamil Cinema News | சினிமா செய்திகள்
யாஷிகாவை நடுரோட்டில் அம்போன்னு விட்டுச்சென்ற பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ்.. கிழித்து தொங்க விடும் நெட்டிசன்கள்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீசன்-4 நிகழ்ச்சியின் போட்டியாளராக இருக்கும் பாலாஜி முருகதாஸின் சிறுவயது கதையை கேட்ட அனைவரையும் கண்கலங்க வைத்தது.
அப்படியிருக்க சனம் செட்டியிடன் சென்ற வாரம் இவர் ஒரு நிறுவனத்தை “டுபாக்கூர்” என்று விமர்சித்து கமலிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து தற்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஜான் மைக்கேல், “என்னுடைய நிறுவனத்தைப் பற்றி தரக்குறைவாக பேசிய பாலாஜி கண்டிப்பாக என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் யாஷிகா பாலாஜியும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவரும் சென்று கொண்டிருந்த கார் நள்ளிரவு நேரத்தில் திடீரென்று விபத்துக்குள்ளானது.
அப்போது யாஷிகாவின் மட்டும் விட்டுவிட்டு பொதுமக்களுக்கு பயந்து பாலாஜி அந்த இடத்தை விட்டு தப்பித்துவிட்டார்.
இந்த சம்பவம் உண்மை என்பதற்கு யாஷிகா தான் வாய் திறக்க வேண்டும் என்று பாலாஜியின் முகத்திரையை கிழித்துள்ளார் ஜோ மைக்கேல்.
மேலும் தற்போது சமூக வலைதளங்களில் பாலாஜி பீரில் குளிக்கும் வீடியோவும் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இவ்வாறு பாலாஜி பற்றிய செய்திகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியதும், “நீ ரொம்ப யோக்கியன் போல் பிக்பாஸில் சீன் போடற!” என்று நெட்டிசன்கள் பாலாஜியை கிழித்து தொங்க விடுகின்றனர்.
