சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

அட நம்புங்கப்பா நானும் சிங்கிள் தான்.. சத்தியம் செய்யாத குறையாக சொன்ன யாஷிகா

சினிமாவில் கவர்ச்சி வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். காலப்போக்கில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த ஒரு நிகழ்ச்சிதான் அவரை ரசிகர்களிடம் அதிக பிரபலம் ஆக்கியது. அந்த ஷோவுக்கு பிறகு யாஷிகா எங்கு சென்றாலும் அந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. இதனால் அவருக்கு ஒரு சில பட வாய்ப்புகளும் கிடைத்தது.

அந்த சமயத்தில் அவர் மிகப்பெரிய விபத்து ஒன்றை சந்தித்து தற்போது அதிலிருந்து மீண்டு பழைய யாஷிகாவாக மாறியுள்ளார். தற்போது சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அவருடைய ரசிகர்களிடம் அடிக்கடி லைவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுவார். அப்போது ரசிகர்கள் எந்த கேள்வி கேட்டாலும் முகம் சுளிக்காமல் அதற்கு பதில் அளிப்பார்.

அதுபோல் யாஷிகா சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு நான் சிங்கிள் தான் என்று தன ரசிகர்களிடம் கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது எனக்கு ஒருவரை பிடித்தால் அவருக்கு என்னை பிடிப்பதில்லை, என்னை ஒருவருக்கு பிடித்தால் அவரை எனக்குப் பிடிப்பதில்லை இதனால் நான் இப்ப சிங்கிள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் பிக்பாஸ் நிரூப்புடன் காதலில் இருந்தபோது ஒரு லைவ் நிகழ்ச்சியில் இருவரும் கட்டிப்பிடித்தபடி லிப்கிஸ் கொடுத்த வீடியோ படு வைரலானது. மேலும் அவர் கலந்து கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மகத்தை காதலிக்கிறேன் என்று சொல்லி பலரையும் அதிர்ச்சி ஆக்கினார்.

இதையெல்லாம் பார்த்துவிட்டு நீங்கள் இப்ப சிங்கிள் என்று சொன்னால் நாங்க நம்பி விடுவோமா என்று யாஷிகாவின் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஜாலியாக கமெண்ட் அடித்து வருகின்றனர். இருப்பினும் யாஷிகா சத்தியம் செய்யாத குறையாக நான் சிங்கிள் தான் என்று கூறி வருகிறார்.

- Advertisement -spot_img

Trending News