Connect with us
Cinemapettai

Cinemapettai

kgf-2-yash

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கேஜிஎஃப்(KGF) படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா? கதை எழுதியதே அவருக்காகத் தானாம்!

இந்திய சினிமாவில் மிகச்சிறிய வியாபார எல்லையை கொண்டிருந்த கன்னட சினிமாவை மிகப் பெரிய மார்க்கெட்டுக்குள் கொண்டு சென்ற பெருமை கே ஜி எஃப் படத்துக்கு உண்டு.

கே ஜி எஃப் படம் வெளியாகும் போது அந்த படத்திற்கு பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லை. படம் வெளியான பிறகு கிடைத்த விமர்சனங்களால் அந்த படம் மாபெரும் வசூலை குவித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கேஜிஎப் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

ஆனால் இந்த படத்திற்கு அப்படியே நேர் எதிர்மாறாக எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக கே ஜி எஃப் 2 படத்தின் டீசர் தற்போது வரை 173 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது தான்.

இந்நிலையில் கேஜிஎஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் ஒரு சீக்ரெட் ஒன்றை உடைத்துள்ளார். கேஜிஎஃப் படத்தை பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஷை மனதில் வைத்துதான் எழுதினாராம்.

prabhas-prasanth-neel-cinemapettai

prabhas-prasanth-neel-cinemapettai

ஆனால் பாகுபலி வெற்றியால் பிரபாஸ் உச்சத்தில் இருந்த நிலையில் அவரிடம் கதை சொல்ல முடியவில்லையாம். அதனைத் தொடர்ந்து அந்த படத்தின் கதையை கேட்டுவிட்டு நான் நடிக்கிறேன் என கூறி நடித்துக் கொடுத்தாராம் யாஷ்.

தற்போது இந்த தகவலை பிரசாந்த் நீல் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓபன் ஆக தெரிவித்துள்ளார். ஒருவேளை பிரபாஸ் கேஜிஎப் படத்தில் நடித்திருந்தால் பாகுபலி அளவுக்கு கே ஜி எஃப் படம் பேசப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
To Top