Connect with us

Cinemapettai

உச்சத்துக்குச் செல்லும் கே ஜி எஃப் யாஷ்.. இணையும் பிரம்மாண்ட கூட்டணி

yash-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உச்சத்துக்குச் செல்லும் கே ஜி எஃப் யாஷ்.. இணையும் பிரம்மாண்ட கூட்டணி

கன்னட சினிமாவை அனைவரும் கலாய்த்துக் கொண்டிருந்த நேரத்தில் கேஜிஎப் என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவை இந்திய சினிமாவில் முக்கிய அம்சமாக மாற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் நடிகர் யாஷ்.

ஒவ்வொரு மொழியிலும் ஒரு சில நடிகர்களின் படங்களை மட்டுமே இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடுவார்கள். அந்த லிஸ்டில் இணைந்துவிட்டார் நடிகர் யாஷ்.

பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் திரைப்படம் இந்திய சினிமாவையே மிரள வைத்தது. தற்போது கேஜிஎப் 2 படம் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. முன்னதாக ஜூலை 17ஆம் தேதி ரிலீஸாக தேதி குறிக்கப்பட்ட நிலையில் தற்போது தள்ளிப்போக அதிக வாய்ப்பு இருக்கிறது.

கேஜிஎப் படங்களுக்கு பிறகு யாஷ் அனைத்து மொழிகளுக்கும் தெரிந்த நடிகரானதால் தற்போது மற்ற மொழி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடமிருந்து தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் அடுத்ததாக மகேஷ்பாபுவுக்கு ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்த பூரி ஜெகன்நாத் என்பவருடன் கைகோர்க்க உள்ளாராம். பூரி ஜெகநாத் தற்போது விஜய் தேவர்கொண்டாவை வைத்து லிகர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த பிறகு கேஜிஎப் நடிகர் யார் நடிக்கும் படத்தை இயக்க உள்ளாராம். இந்த படம் அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

yash-cinemapettai-01

yash-cinemapettai-01

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top