Tamil Cinema News | சினிமா செய்திகள்
எதிர்பார்க்காத நேரத்தில் மிருகத்தனமாக வெளியான கே ஜி எஃப்-2 புதிய போஸ்டர்.. தீ தெறிக்கும் மாஸ்!
கன்னட சினிமாவை அனைவரும் கிண்டல் செய்து கொண்டிருந்த நேரத்தில் மிக பிரமாண்டமாக வெளியாகி அனைத்து மொழிகளிலும் செம வரவேற்பு பெற்று திரைப்படம் கேஜிஎப் சாப்டர் ஒன்.
கன்னட நடிகர் யாஷ் கேஜிஎஃப் படத்திற்கு பிறகு தற்போது இந்திய நடிகராக மாறி உள்ளார். கேஜிஎப் சாப்டர் 2 படத்திற்கு இந்தியா முழுவதும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதற்கு ஏற்றார்போல் படத்தில் நடிகர் நடிகைகளின் தேர்வுகளில் இந்திய அளவில் பிரபலமான நடிகர்களை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் கேஜிஎப் சாப்டர் ஒன் படத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கேரக்டர் ஆதிரா.
கேஜிஎப் சாப்டர் 2 படத்தில் ஆதிரா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மிருகத்தனமான கதாபாத்திரமாக அவருக்கு கிடைத்துள்ளதாம்.
இதனால் அந்த கதாபாத்திரத்தை திரையில் பார்க்க பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருடைய கேரக்டரை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வீடியோ ஒன்று ஜூலை 29 ஆம் தேதி காலை 10 மணி அளவில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அப்டேட் வெளியிட்ட போஸ்டரே தெறிக்க விடுகிறது. இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களும் அந்த அப்டேட் நாளை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

kgf-chapter-2-cinemapettai
