fbpx
Connect with us

தமிழ் முன்னணி நடிகர் படத்துடன் ஒத்தைக்கு ஒத்த களமிறங்கும் கேஜிஎஃப் 2.. பதற்றத்தில் ரசிகர்கள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தமிழ் முன்னணி நடிகர் படத்துடன் ஒத்தைக்கு ஒத்த களமிறங்கும் கேஜிஎஃப் 2.. பதற்றத்தில் ரசிகர்கள்!

கன்னட சினிமாவை பலரும் கிண்டல் செய்து கொண்டிருந்த நிலையில் கேஜிஎப் என்ற பிரமாண்ட படத்தை கொடுத்து இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் யாஷ்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவான கேஜிஎப் திரைப்படம் இந்திய சினிமாவில் வசூல் வேட்டை ஆடியது.

இதனைத் தொடர்ந்து கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி கொண்டிருக்கிறது. அக்டோபர் மாதம் படம் வெளியாக இருந்த நிலையில் இடையில் நடந்த சந்தர்ப்ப சூழ்நிலையால் படப்பிடிப்பு தள்ளிச் சென்றது.

kgf-2

kgf-2

இன்னும் 15 நாட்களுக்குள் கேஜிஎஃப் 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடுமாம். அதனைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியையும் முடிவு செய்துவிட்டார்களாம்.

2021 ஏப்ரல் மாத வெளியீடாக கே ஜி எஃப் 2 வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறதாம். ஆனால் அதே தேதியில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படமும் வெளியாக உள்ளதாம்.

ரஜினி மற்றும் யாஷ் ஆகிய இருவருக்குமே இந்தியா முழுவதும் தற்போது ரசிகர்கள் அதிகமாக இருக்கும் நிலையில் இரண்டு படங்களும் வசூல் வேட்டை யாடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறது சினிமா வட்டாரம்.

Continue Reading
To Top