Tamil Cinema News | சினிமா செய்திகள்
KGF யாஷ் கெட்டப்பில் சாந்தனு வெளியிட்ட புகைப்படம்.. மிரண்டு போன கோலிவுட்
சாந்தனு நடிகன் என்பதை விட நல்ல நடன கலைஞன் என்றே கூறலாம். தற்போது தனக்கென்று ஒரு நடன பயிற்சி மையம் வைத்து அதனை திறமையாக நடத்தி வருகிறார்.
இவர் தளபதியுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தில் தனது கதாபாத்திரம் மிகவும் அழுத்தமானது நான் இல்லை என்றால் மாஸ்டர் படமே இல்லை என்பது போன்ற கருத்துக்கள் வெளிவந்தது.
உடனே சாந்தனு இது போன்ற புரளிகளை கிளபதிர்கள் என்று உடனே பதில் அளித்து இருப்பார். நான் அப்படி கூறவே இல்லை என்றும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
சாந்தனு தனது முழு தோற்றத்தை மாற்றி அடையாளமே தெரியாமல் தாடி மற்றும் குடுமியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கே.ஜி.எப் படத்தின் ஹீரோ யாஷ் போல தோற்றம் இருப்பதாக ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அந்த பதிவில் ,
‘பழிவாங்குவதற்கு நேரத்தை வீணாக்காதீர்கள்.. உங்கள் மன அமைதி மிகவும் முக்கியமானது வெற்றி தான் சிறந்த பழிவாங்குதல்
உங்களைப் புண்படுத்தியவர்கள், இறுதியில் தங்களைத் தாங்களே **** ஆக்குவார்கள்… நீங்கள் உட்கார்ந்து பார்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

shanthanu
