கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய யஷ்.. கண்ணை மறைக்கும் வெற்றி

கன்னட நடிகர் நடித்த கேஜிஎப் 2 திரைப்படம் உலகெங்கும் பிரமாண்டமாக வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில், சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீணா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், மாஸ் டயலாக் ஆகியவை தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. திரை தீப்பிடிக்கும் மாஸ் டயலாக்குகளுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. கேஜிஎஃப் 2 திரைப்படம், புஷ்பா மற்றும் RRR படத்தின் சாதனைகளை முறியடித்து இன்னும் ஓரிரு நாட்களில் இப்படம் ரூ.1000 கோடி கிளப்பில் சேர உள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்திற்காக யாஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படம் ரிலீசான வெறும் 7 நாட்களில் 715 கோடிகளை கடந்து வசூல் செய்து கடந்த மாதம் வெளியான ஆர். ஆர். ஆர் படத்தின் வசூலைக் கூட இது பின்னுக்கு தள்ளியது. சிறிய திரையுலகமான கன்னடத்திலிருந்து வெளியான ஒரு படம் மற்ற திரையுலகிலிருந்து வெளியான படங்களை ஆதிக்கம் செலுத்தி வருவது, அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

100 கோடி பட்ஜெட்டில் உருவாகி 750 கோடிக்கு மேல் வசூலித்துள்ள கே.ஜி.எஃப் படத்திற்கான யாஷின் சம்பளம் குறித்து தற்போது திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தகவல் கூறியுள்ளார். அதாவது 2 பாகங்களாக உருவான இந்த படத்திற்கு நடிகர் யாஷ் சுமார் 25 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

2 பாகங்களையும் சேர்த்து படத்தின் பட்ஜெட் 180 கோடி ரூபாயாகும். அதில் 25 கோடி என்பது வெறும் 7% தான் வருகிறது. யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் 700 கோடி வசூல் பெற்றுள்ளதால் தற்போது தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார். கிட்டத்தட்ட 50 கோடி வரை தற்போது சம்பளம் கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் ஒரு படம் வெற்றி அடைந்தால் அதற்காக இவ்வளவு கோடியா சம்பளம் ஏற்றுவது இது நியாயமில்லை வெற்றி எப்போதும் கண்ணை மறைக்கக் கூடாது என கூறி வருகின்றனர்.

Next Story

- Advertisement -